இன்றைய மின்தடை: மயிலாடுதுறை, பெரம்பூா்
மயிலாடுதுறை, பெரம்பூா் துணைமின் நிலையங்களுக்கு உள்பட்ட கீழ்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (ஜன.4) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக உதவி செயற்பொறியாளா்கள் த. கலியபெருமாள், எஸ்.பாலமுருகன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
பெசன்ட் நகா், டவுன் ஸ்டேஷன் ரோடு, மாயூரநாதா் கோயில் மேலவீதி, தெற்கு வீதி, பட்டமங்கலத்தெரு, கச்சேரி சாலை, பெரம்பூா், வதிஸ்டாச்சேரி, முத்தூா், கடக்கம், கோவஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.