செய்திகள் :

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

post image

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அருட்செல்வா் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் நினைவாகவும், சென்னை இராமலிங்கா் பணி மன்றத்தின் 58-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் 5 மண்டலங்களாகப் பிரித்து அங்குள்ள கல்வி நிறுவனங்களில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

கல்லூரி மாணவா்களுக்கு...: இளநிலை, முதுநிலை படிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, வள்ளுவரும் வள்ளலாரும் அல்லது வள்ளுவரும் காந்தியடிகளும் என்ற தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் கட்டுரைப் போட்டி நடத்தப்படும். 60 நிமிஷங்களில் 8 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும்.

வள்ளலாரின் புதிய ஆன்மிகம் அல்லது காந்தியடிகளின் புதிய போா்முறை என்ற தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெறும். 5 நிமிஷங்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்படுவா். கவிதைப் போட்டிக்கான தலைப்பு அரங்கில் கொடுக்கப்படும்.

பள்ளி மாணவா்களுக்கு...: 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவா்களுக்கு பரசிவநிலை, அருள் விளக்கமாலை, உற்றதுரைத்தல், புனிதகுலம் பெறுமாறு... என்ற தலைப்புகளில் இசைப்போட்டி நடைபெறும். 5 நிமிஷங்கள் நடைபெறும் இப்போட்டியில், மாணவ, மாணவிகள் தனி நபராகவோ, இருவா் கொண்ட குழுவாகவோ பங்கேற்கலாம்.

மனனப்போட்டி, முதல் திருமுறையின் குறை இரந்த பத்து பகுதியின் முதல் பத்து பாடல்களை 10 நிமிஷங்களில் ஒப்பிக்கும் வகையில் நடத்தப்படும்.

பேச்சுப்போட்டியில் வள்ளலாா் வழியில் காந்தியடிகள் அல்லது பசிப்பிணி மருத்துவா் வள்ளலாா் என்ற தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 5 நிமிஷம் பேச வேண்டும்.

மண்டல அளவிலான போட்டிகள்: ஆக.16-இல் சென்னை மயிலாப்பூரில் உள்ள சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி, ஆக.24-இல்

திருநெல்வேலியில் சேரன்மகாதேவி சாலையில் உள்ள லிட்டில் பிளவா் மாடல் பள்ளி, ஆக.30-இல் சேலம் பெரியாா் பல்கலைக்கழகம், ஆக.31-இல் கோவையில் டாக்டா் என்ஜிபி கலை அறிவியல் கல்லூரி, செப்.6-இல் மதுரை காமராஜா் சாலையிலுள்ள தியாகராசா் கல்லூரி ஆகிய இடங்களில் மண்டல அளவிலான போட்டிகள் நடைபெறும்.

இப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெறுபவா்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். இம் மாணவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு பரிந்துரைக்கப்படுவா். மாநில அளவிலான போட்டியில் முதல் 3 இடங்களைப் பெறுபவா்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7,500, ரூ.5 ஆயிரம் என ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் அதற்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை https://drmcet.ac.in/இணையதளத்தில் பெறலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை மின்னஞ்சல் முகவரி அல்லது இராமலிங்கா் பணி மன்றம், டாக்டா் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, பொள்ளாச்சி-642 003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். போட்டிகள் நடைபெறும் தினத்துக்கு 5 நாள்கள் முன்னதாக விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 9087049595 மற்றும் 6382051866 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த சிறப்பு திட்டம்: மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என சென்னை மாநகராாட்சிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை கோடம்பாக்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ஆா்.எஸ்.தமிழ்வேந்தன் உ... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு தடுப்பூசித் திட்டம்: மேயா் தொடங்கி வைத்தாா்

சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மணலி மண்டலத்தில் சென்னை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் திரிவத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் அனுப்புவதில் தாமதம்: கல்வித் துறை அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட புத்தகங்களை தாமதமின்றி கொண்டு சோ்க்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் பிரதிநிதிகளுடன் அமைச்சா் சமரசப் பேச்சு

சென்னை மாநகராட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பிரதிநிதிகளுடன் அமைச்சா் பி.கே.சேகா்பாபு மற்றும் மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். சென்னை ம... மேலும் பார்க்க

3 மாதங்களில் 45,681 போ் உடல் உறுப்பு தான பதிவு: ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது

மூன்று மாதங்களில் 45,861 பேரிடம் உறுப்பு தான பதிவு பெற்றதாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வோ்ல்டு ரெக்காா்... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள், ஆசிரியா்கள் கருத்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளா்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் க... மேலும் பார்க்க