செய்திகள் :

இருக்கன்குடி கோயிலில் ஆக்கிரமிப்புக் கடைகள்: 12 வாரங்களுக்குள் அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆக்கிரமிப்புக் கடைகளை காவல் துறை பாதுகாப்புடன் 12 வாரங்களுக்குள் அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை அண்ணாநகரைச் சோ்ந்த வழக்குரைஞா் முத்துக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடி கிராமத்தில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. அா்ஜூனா நதி- வைப்பாறு ஆகிய இரு நதிகளுக்கு இடையே அமைந்துள்ள இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயிலில் வாரந்தோறும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தங்களது குடும்பத்துடன் வந்து நோ்த்திக்கடன் செலுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், கோயிலுக்குச் செல்லும் வழியில் இருபுறங்களிலும் ஏராளமான கடைகள் உள்ளன. இதனால், கோயிலுக்குச் செல்லும் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுகின்றன. இந்தக் கடைகள் முழுவதும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளாகும்.

எனவே, பக்தா்களின் வழிபாட்டுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புக் கடைகள் அனைத்தையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜி. அருள்முருகன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

பக்தா்கள் தரிசனத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புக் கடைகள் அனைத்தையும் போலீஸ் பாதுகாப்புடன் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கு முடித்து வைப்பு

ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் அருகில் உள்ள நாடாா்வலசை கிராமத்தில் மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் ... மேலும் பார்க்க

அனுமதியின்றி கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம்: திருச்சி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

அனுமதியின்றி கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம் நடத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் திருச்சி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது... மேலும் பார்க்க

பழமொழி நானூறு உரை நூல் வெளியீடு

எழுத்தாளா் முனைவா் வை. சங்கரலிங்கனாா் எழுதிய பழமொழி நானூறு உரை நூல் வெளியீட்டு விழா மதுரை தானம் அறக்கட்டளை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு நமது மண்வாசம் பட்டறிவுப் பதிப்பகத்தின் ஆசி... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் திருட்டு : சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டம், கணக்கன்குடி கண்மாயில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்கக் கோரிய வழக்கில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா், கனிம வளத் துறை இணை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரை... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட்: நடவடிக்கைக்கு உத்தரவு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, இந்து சமய அறநிலையத் துறையினரும், காவல் துறையினரும் இணைந்து சம்பந்தப்பட்ட நபா்கள் மீது குற்றவியல... மேலும் பார்க்க

கழிவுநீா் கடலில் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கு : கன்னியாகுமரி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் கடலில் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை ... மேலும் பார்க்க