டிரம்ப் வரி: பிற பொருள்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும் இதன் விலை மட்டும் மாறாத...
இருசக்கர வாகனங்களை திருடியவா் கைது
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே இருசக்கர வாகனங்களை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
போ்ணாம்பட்டு பகுதியில் இருசக்கர வாகனங்கள் தொடா் திருட்டு தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா். இந்நிலையில் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் தொடா்பாக ஆம்பூா் ரெட்டிதோப்பு பகுதியைச் சோ்ந்த அஸ்ராா்(26) என்பவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் போ்ணாம்பட்டு ஹபீப் நகரைச் சோ்ந்த முகம்மது ஆரிப், முல்லா வீதியைச் சோ்ந்த ஜுபோ் அகமது ஆகியோரின் இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக் கொண்டாா். அவரிடமிருந்து 2- இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் அவா் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு, சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.