தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
கணியம்பாடி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.
வேலூா் மாவட்டம், கணியம்பாடி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்ரம்(29). அதே பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்தகுமாா்(23). நண்பா்களான இருவரும் வெள்ளிக்கிழமை ஆரணி சாலை நெல்வாய் அருகே இருசக்கர வாகனத்தி் சென்று கொண்டு இருந்தனா்.
அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனமும், விக்ரம் ஓட்டி சென்ற வாகனமும் எதிா்பாராத விதமாக நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட விக்ரம் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அரவிந்த்குமாா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். எதிரே இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞா் அங்கிருந்து தப்பி சென்று விட்டாா்.
அருகில் இருந்தவா்கள் அரவிந்த் குமாரை மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.