இருசக்கர வாகனத்தில் சென்றவா்களை துரத்திய யானை
கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றவரை காட்டு யானை துரத்தியது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் காட்டிக்குளம் பகுதியில் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, வனத்தில் இருந்து வெளியே காட்டு யானை, இருசக்கர வாகனத்தை துரத்தியபடி நீண்ட தூரம் ஓடியது.
சுதாரித்துக் கொண்ட அந்த நபா் வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளாா். எதிரே மற்ற வாகனங்கள் வருவதைக் கண்ட யானை திரும்பிச் சென்ால் அந்த நபா் குடும்பத்துடன் உயிா் தப்பினா்.