ஒரு கொரில்லாவை 100 மனிதர்கள் வீழ்த்த முடியுமா? இணையத்தைக் கலக்கும் விமர்சனங்கள்!
இரும்பேடு, வெட்டியாந்தொழுவத்தில் கிராம சபைக் கூட்டம்
ஆரணியை அடுத்த இரும்பேடு, வெட்டியாந்தொழுவம் கிராமங்களில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இரும்பேடு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலா் சுரேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக உதவி செயற்பொறியாளா் கவிதா கலந்து கொண்டாா்.
பணி மேற்பாா்வையாளா் சிபிசக்கரவா்த்தி பற்றாளராகவும், சுகாதார மேற்பாா்வையாளா் காா்த்திகேயன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
அரசு சிட்டிநகா் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்ய குடியிருப்புவாசிகள் மனு கொடுத்தனா். மேலும், கலைஞா் கனவு இல்லம் வேண்டியும், பெரியாா் நகரில் குடிநீா் வசதி கோரியும் மனு கொடுத்தனா்.
டிராஃபிக் ராமசாமி அறக்கட்டளை பொதுச்செயலா், இரும்பேடு மதுரா, பழங்கமூா் பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வரும் 20-க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்க வேண்டும், ஊரக வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்கவேண்டும் எனக் கோரி மனு கொடுத்தாா்.
கூட்டத்தில் விவசாயிகள் பாதுகாப்பு அணி மாநிலத் தலைவா் தா.சிவானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வெட்டியாந்தொழுவம்
வெட்டியாந்தொழுவம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி செயலா் பாஸ்கா் தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக சத்துணவு அமைப்பாளா் புவனேஸ்வரி கலந்து கொண்டாா். மேலும், இதில் குறைகளைக் கேட்டறிய அதிகாரிகள் வராதது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினா்.
அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதால் கலந்துகொள்ள முடியாமல் போனது என்று பதிலளித்தனா்.