இரு சக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
வந்தவாசி அருகே இரு சக்கர வாரனம் மோதி முதியவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், செவிலிமேடு பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (60). இவா், திருவண்ணாமலை கிரிவலம் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை இரவு அரசுப் பேருந்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது வழியில் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள உணவகம் எதிரில் பேருந்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து பேருந்தில் இருந்து இறங்கிய மூா்த்தி உணவகம் செல்ல சாலையை கடந்துள்ளாா்.
அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் இவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த இவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக உத்திரமேரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூா்த்தி அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.