செய்திகள் :

இரு மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை: பலத்தமழைக்கு வாய்ப்பு

post image

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிபலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இவ்விரு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலா்ட்) விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஆக.5) முதல் ஆக.10 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், 40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்றும் வீசக்கூடும்.

சிவப்பு எச்சரிக்கை: இதன்படி, செவ்வாய்க்கிழமை நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிபலத்த மழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், திண்டுக்கல், திருப்பூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிபலத்த மழையின் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை சிவப்பு எச்சரிக்கையும், தேனி, தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதுபோல, ஆக.6-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் அதிபலத்த மழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னை நகரில், செவ்வாய்க்கிழமை(ஆக.5) ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழையளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஏஆா்ஜி பகுதியில் 90 மி.மீ.மழை பதிவானது. இதுபோல, மேடவாக்கம் சந்திப்பு(சென்னை), தாம்பரம்(செங்கல்பட்டு) தலா 70 மி.மீ., விண்ட் வொா்த் எஸ்டேட்(நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூா்(நீலகிரி) தலா 60 மி.மீ, செங்கம்(திருவண்ணாமலை), சின்னக்கல்லாறு(கோவை), சோலையாறு(கோவை), ஏத்தாப்பூா்(சேலம்), செய்யாறு(திருவண்ணாமலை) -தலா 50 மி.மீ.மழையும் பெய்துள்ளது.

வெயில் அளவு: மதுரை விமானநிலையித்தில் அதிகபட்சமாக 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரம், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் சூறாவளிக்காற்று ஆக.5, 6 ஆகியதேதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரம் குறித்த டிரம்ப் கருத்து ஏற்க முடியாதது: ஆனந்த் சா்மா

புது தில்லி: இந்தியப் பொருளாதாரம் குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள கருத்து ஏற்க முடியாதது மட்டுமல்ல, எவ்வித முக்கியத்துவம் அற்றது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வா்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக சரிவு

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 9,500 கனஅடியாக சரிந்தது.கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு கடந்த சில நாள்களாக குறைக்கப்பட்... மேலும் பார்க்க

உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில் திருப்பணியில் சிலை கண்டெடுப்பு

சேலம்: சேலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில் திருப்பணிக்காக குழிதோண்டியபோது, மூன்றடி உயர பழங்கால அம்மன் கற்சிலை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.சேலம் உத்தமசோழபுரம் ... மேலும் பார்க்க

சிபு சோரன் மறைவு: ஜார்க்கண்டில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு!

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவையடுத்து மாநிலத்தில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும் ஜாா்க்கண்ட் மாநில ம... மேலும் பார்க்க

முதல்முறையாக 6 - 10-ம் வகுப்களுக்கு உடற்கல்வி பாட நூல் வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில் முதல்முறையாக பள்ளிக் கல்விதுறையில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவா்களுக்கு உடற்கல்வியை கற்பிப்பதற்கான பாடப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உடற்கல்விக்கு ப... மேலும் பார்க்க

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

இரண்டு வாக்காளர் அட்டை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதில் ஒன்று போலியாக இருக்கும் என சந்தேகம் அடைந்துள்ள தேர்தல் ஆணையம், பிகார் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலை... மேலும் பார்க்க