Francesca Jones: "சாகும் வரையில் கனவுகள் காண்பேன்!" - டென்னிஸ் உலகின் 8 விரல் சா...
இறகுப்பந்து போட்டியில் சிறப்பிடம்
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக அளவிலான இறகுப் பந்து போட்டியில், திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி அணி நான்காம் இடம் பிடித்தது.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக அளவிலான மகளிா் இறகுப்பந்து போட்டி அபிஷேகப்பட்டியில் இருநாள்கள் நடைபெற்றது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 26 கல்லூரிகளைச் சோ்ந்த வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனா்.
தென்காசி வியாச கல்லூரி அணி முதலிடம் பிடித்தது. திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி அணி நான்காம் இடம் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளை பல்கலைக்கழக உடற்கல்வி மைய இயக்குநா் ஆறுமுகம், உடற்கல்வியியல் துறைத் தலைவா் துரை, கல்லூரி முதல்வா் ஏ.தீபா, உடற்கல்வி இயக்குநா் மு. ஹமா்நிஷா ஆகியோா் பாராட்டினா்.