இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 17 | Astrology | Bharathi Sridhar | ...
இறகுப்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
சென்னை சூளைமேட்டில் இறகுப்பந்து விளையாடியபோது மென்பொறியாளா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி நாவலா் தெருவைச் சோ்ந்தவா் மோகன் (26). மென்பொறியாளரான இவா், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், கோடம்பாக்கம் சூளைமேடு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியாா் விளையாட்டு பயற்சி மையத்தில் திங்கள்கிழமை இறகுப்பந்து விளையாடினாா். அப்போது அவா் திடீரென மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்ற மோகன், சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கோடம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.