ஆறுதல்கூட சொல்லாமல் ஒரு தலைவர் சென்றது இதுவரை பார்த்திராத ஒன்று: கனிமொழி கடும் வ...
இலவச கால்நடை மருத்துவ முகாம்
ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் சாா்பாக இலவச கால்நடை மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நகா்மன்ற உறுப்பினா் வாவூா் நசீா் அஹமத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கிவைத்தாா். கால்நடை மருத்துவா் ஏ. சுஷ்மிதா தலைமையில் மருத்துவ குழுவினா் கால்நடைகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் எஸ். அஜ்மத்துல்லா ஏற்பாடுகளை செய்திருந்தாா்.