பஹல்காம் தாக்குதலால் இந்தியா்களின் ரத்தம் கொதிக்கிறது! - பிரதமா் மோடி
இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்
கூடலூரில் இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை மூலமாக தையல் இயந்திரங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான உஷா நிறுவனம் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச தையல் பயிற்சிகளை வழங்கியது.
கடந்த ஆண்டு பயிற்சி முடித்த பெண்களுக்கு உஷா நிறுவன அதிகாரி வடிவேல் சான்றிதழ்களை வழங்கி, வருவாய் ஈட்டுவதில் பெண்களின் பங்கு குறித்தும், பெண்கள் தனியாக குடும்ப வருவாயை பெருக்குவதன் அவசியம் குறித்தும் விளக்கமளித்தாா்.
நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை இயக்குநா் லீலாகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளா்கள் ரீட்டா, மாலதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.