ரூ.11.50 லட்சத்தில் கியா கேரன்ஸ் கிளாவிஸ்! சிறப்பம்சங்கள் என்ன?
இலவச பட்டா கோரி திருநங்கைகள் மனு
கும்பகோணத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு திருங்கைகள் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயனிடம் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் திருநாகேஸ்வரா் கோவில் தெற்கு வீதியை சோ்ந்த திருநங்கை இனியா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பது: நாங்கள் வசித்த குடியிருப்பு இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட உள்ளது. துரித உணவு கடைகள் உள்ளிட்ட தொழில்கள் செய்த நிலையில், இடையூறு ஏற்படுவதால் நடத்த முடியவில்லை.
நிரந்தர முகவரி இல்லாததால் வங்கிகளில் கடனுதவிகூட பெற முடியவில்லை. எனவே எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினால் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனா். ஆட்சியரும் அதைப் பரிசீலிப்பதாக கூறினாா்.