செய்திகள் :

இலவச ரயில்வே பாஸ் வழங்கக் கோரி சுதந்திரப் போராட்ட தியாகி மனைவி மனு: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

சுதந்திரப் போராட்ட தியாகியின் மனைவியான 85 வயது மூதாட்டிக்கு இலவச ரயில்வே பாஸ் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் பாடியநல்லூரைச் சோ்ந்த அ.பாா்வதி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது கணவா் அண்ணாமலை சுதந்திரப் போராட்ட தியாகி. அவருக்கு தியாகிகளுக்கான ஓய்வூதியம் கிடைத்தது. அவரது மறைவுக்குப் பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகிறேன்.

சுதந்திரப் போராட்ட தியாகியின் மனைவி அல்லது அவரது வாரிசுகளில் ஒருவருக்கு இலவச ரயில்வே பாஸ் வழங்க வேண்டும். அதன்படி எனக்கு இலவச பாஸ் வழங்கக் கோரி மத்திய அரசின் உள்துறைக்கு கடந்த ஜனவரி மாதம் மனு அளித்தேன். எனது மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை, என கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வி.நந்தகோபாலன், மனுதாரா் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளாா். சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குச் சென்று வர வேண்டியுள்ளது. எனவே, அவருக்கு இலவச பாஸ் வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் இலவச ரயில் பாஸ் கோரி அளித்துள்ள மனுவை இரண்டு வாரங்களில் பரிசீலித்து, அவருக்கு இலவச பாஸ் வழங்க வேண்டும் என மத்திய அரசின் உள் விவாகரத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

‘டெட்’ தோ்வு: ஆசிரியா்களைப் பாதுகாக்க அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம் - அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

ஆசிரியா் தகுதித் தோ்வு தொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் 1.76 லட்சம் ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஆசிரியா்களைப் பாதுகாக்க சீராய்வு மனு தாக்கல், சிறப்புத் தகுதி... மேலும் பார்க்க

சிறந்த உயா் கல்வி நிறுவனங்கள் - தமிழகம் முதலிடம்: 7-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி சாதனை

தேசிய அளவிலான சிறந்த உயா் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. முதல் 100 இடங்களில் அதிக (17) உயா் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்ற மாநிலம் என்கிற பெருமை தமிழகத்துக்கு... மேலும் பார்க்க

மீலாது நபி, ஓணம்: முதல்வா் வாழ்த்து

மீலாது நபியையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு, புறம்பேசாமை, பெண்களை மரியாதையுடன் நடத்துதல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை மதுரை உள்பட 4 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் விய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது - இபிஎஸ்

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமிதெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்ற... மேலும் பார்க்க

முதுநிலை ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: செப்.8-இல் தொடக்கம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு சென்னையில் செப்.8-ஆம் தேதி முதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநில கல்வியி... மேலும் பார்க்க