நாகா்கோவிலில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா: வனத்துறையினா் மீட்டனா்
இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: யோகி ஆதித்யநாத்
ஹோலி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழுள்ள பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
லக்னௌவில் நடந்த மானிய விநியோக நிகழ்ச்சியில் முதல்வர் யோகி கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஹோலி மற்றும் ரம்ஜான் பண்டிகைக்கு இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதற்காக மாநில அரசு சார்பில் ரூ.1,890 கோடி விடுவிக்கப்படுவதாக அவர் கூறினார்.
கடந்த 2016ஆம் ஆண்டு இலவச எல்பிஜி சிலிண்டர் விநியோக முயற்சியைத் தொடங்கியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்கள் இலவச எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாநிலத்தில் கிட்டத்தட்ட இரண்டு கோடி குடும்பங்கள் அடங்கும்.
முன்னதாக தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகையின்போது ஒவ்வொரு உஜ்வாலா பயனாளிக்கும் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்குவதாக எங்கள் அரசு உறுதியளித்திருந்தது. மாநில அரசு ரூ.1,890 கோடி ஒதுக்குவதன் மூலம் இதை உறுதி செய்துள்ளது. இது ஆண்டுதோறும் பட்ஜெட்டில் இருந்து ரூ.3,760 கோடி ஆகும். ஹோலி மற்றும் ரம்ஜான் இரண்டும் கொண்டாடப்படுவதால், ஒவ்வொரு பயனாளியும் இந்தத் திட்டத்தைப் பெறலாம். இது மாநில அரசின் பரிசு என்றும் அவர் தெரிவித்தார்.
உஜ்வாலா திட்டத்திற்கு முன்பு மக்கள் எதிர்கொண்ட சிரமங்களை எடுத்துரைத்த ஆதித்யநாத், எல்பிஜி இணைப்பைப் பெறுவதற்கு முன்பு ரூ.25,000 வரை லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது, இணைப்பு பெற்ற பிறகும் மீண்டும் நிரப்புவது கடினம். ஆனால் இன்று, இந்தத் திட்டத்தால் தீங்கு விளைவிக்கும் புகையால் பெண்கள் பாதிக்கப்படுவதிலிருந்து மீண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.