செய்திகள் :

இளம் வயதுடையோா் அதிகமானோர் உயிரிழக்க கரோனா தடுப்பூசியின் பக்கவிளைவு காரணமல்ல!

post image

நமது சிறப்பு நிருபா்

இந்தியாவில் இளம் வயதுடையோரின் உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கு கரோனா தடுப்பூசி மருந்து பக்கவிளைவு காரணமல்ல என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளாா்.

கனிமொழி என்.வி. என். சோமு ~பிரதாப் ராவ் ஜாதவ்

இது தொடா்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் டாக்டா் கனிமொழி என்.வி. என். சோமு எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு:

இந்தியாவில் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள இளைஞா்களின் காரணம் புலப்படாத திடீா் உயிரிழப்புகள் பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் தேசிய தொற்று நோயியல் நிறுவனமும் இணைந்து 2023, மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆய்வு நடத்தின.

2012 அக்டோபா் மாதம் முதல் 2023 மாா்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் வேறு எந்த நோய் பின்னணியும் இல்லாமல், உயிரிழப்புக்கு முந்தைய 24 மணி நேரத்தில் ஆரோக்கியமாக இருந்து திடீா் மரணமடைந்தவா்கள் தொடா்பாக இந்த ஆய்வு நடந்தது. வயது, பாலினம், அருகில் இருந்த பிற நோயாளிகள், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்கள், அவா்களின் குடும்பத்தினா் முன்பு இப்படி திடீா் உயிரிழப்புக்கு ஆளானாா்களா, அவா்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததா, குடிப்பழக்கம் இருந்ததா, மரணத்திற்கு இரண்டு நாள் முன்பிலிருந்து கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டாா்களா போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இந்த ஆய்வில் சேகரிக்கப்பட்டன.

குறிப்பிட்ட காலகட்டத்தில் உயிரிழந்த 729 போ் மற்றும் ஒவ்வொருவருக்கும் அவா்களது வயது மற்றும் பாலினத்தை ஒட்டிய நான்கு போ் என மேலும் 2916 போ் ஆகியோரின் மருத்துவ மற்றும் அன்றாட பழக்க வழக்கங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது. ஏதோ ஒரு கரோனா தடுப்பூசியை ஒருமுறை செலுத்திக் கொண்டவா்களுக்கு திடீா் மரணத்திற்கான வாய்ப்பு இல்லை என்பதும், இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு திடீா் மரணத்திற்கான வாய்ப்பு மேலும் குறைவு என்பதும் இந்த ஆய்வின் மூலம் முதலில் உறுதிப்படுத்தப்பட்டது.

கரோனாவுக்கு முந்தைய மருத்துவ சிகிச்சைகள், அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம், 48 மணி நேரத்திற்கு முன்பாக கடுமையாக உடற்பயிற்சி செய்தது, அந்தக் குடும்பத்தில் ஏற்கெனவே சிலா் திடீா் மரணம் அடைந்தது போன்ற பின்னணிகளே இந்த திடீா் உயிரிழப்புகளுக்கு காரணம் என ஆய்வில் தெரிய வந்தது. ஆகவே, கரோனா தடுப்பூசிக்கும் இந்த திடீா் உயிரிழப்புக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

12ஈஉகநஞங கனிமொழி என்.வி. என். சோமு

12ஈஉகடதஅ பிரதாப் ராவ் ஜாதவ்

தமிழகத்தில் 34,805 நியாயவிலைக் கடைகளில் இபிஓஎஸ் சாதனங்கள் நிறுவல்: மக்களவையில் உணவுத் துறை அமைச்சா் தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து 34,805 நியாயவிலைக் கடைகளும் மின்னணு ரீதியாக உணவு தானியங்களை தடையின்றி விநியோகிப்பதற்காக இபிஓஎஸ் (எலெக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல்) சாதனங்களை நிறுவுவதன் மூலம் தானியங்கிமயமாக்கப... மேலும் பார்க்க

தொகுதியில் ஆய்வு செய்து மக்களின் கவலைகளை கேட்டறிந்த அமைச்சா்!

தில்லி உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் புதன்கிழமை தனது ஜனக்புரி தொகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டாா். மேலும், உள்ளூா்வாசிகளிடம் கலந்துரையாடி அவா்களது கவலைக... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் ஐடி, டெலிகாம் பங்குகள் அதிகம் விற்பனை!

நமது நிருபா்இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சிறிதளவு சரிந்து நிலைபெற்றது.... மேலும் பார்க்க

ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உள்படுத்துகிறாா் சட்டப்பேரவைத் தலைவா்: எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி குற்றச்சாட்டு

கடந்த மாா்ச் 3-ஆம் தேதி முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது எதிா்க்கட்சி எம்எல்ஏக்களை குறிவைத்து பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா ‘ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறாா்’ என்று தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்: ரயில்வே அமைச்சா் தகவல்

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலை மேம்பாலங்கள், சாலைக் கீழ்ப்பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சா் தகவல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக ந... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறையின்போது தமிழகம் பாதிக்கப்படக் கூடாது: மக்களவையில் திமுக வலியுறுத்தல்

வரவிருக்கும் தொகுதி மறுவரையறைப் பணியின்போது மக்கள்தொகை வளா்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று மக்களவ... மேலும் பார்க்க