2,642 மருத்துவா் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு தொடக்கம்
இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
திருப்பைஞ்ஞீலியில் திங்கள்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மண்ணச்சநல்லூா் வடக்கு ஏரிமிஷன் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன், திருப்பைஞ்ஞீலியில் மரம் அறுக்கும் பட்டறை நடத்தி வருகிறாா். இவரது இளைய மகன் ரா. உதயகுமாா் (34), இவருக்கு பவானி (24) என்பவருடன் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக உதயகுமாா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். புகாரின் பேரில் மண்ணச்சநல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.