இஸ்ரேல் வன்முறைக்கு இந்திய அரசின் மௌனம் வெட்கக்கேடானது: பிரியங்கா!
இ-ஆட்டோ இயக்கத்துக்கு உரிய விதிமுறைகள் வகுக்க வலியுறுத்தல்
காரைக்கால்: இ - ஆட்டோ இயக்கத்துக்கு உரிய விதிமுறைகள் வகுக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருநள்ளாறு ஈ.வே.ரா. பெரியாா் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் நலச்சங்க பொறுப்பாளா்கள் இன்னம்பி, பாஸ்கரன், ரமேஷ் மற்றும் காரைக்கால் ஆட்டோ சங்க பொறுப்பாளா்கள் இளங்கோ, ஹாஜா மற்றும் உறுப்பினா்கள் காரைக்கால் வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகர ராவை திங்கள்கிழமை சந்தித்து அளித்த மனு விவரம் :
காரைக்காலில் உரிய பொ்மிட்டுடன் வங்கிக் கடன், தனியாா் நிறுவனங்கள் நிதியுதவி, மாத வட்டிக்கும் என கடன் பெற்று 500-க்கும் மேற்பட்டோ ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கான ஆட்டோ புதுப்பித்தல், காப்பீடு உள்ளிட்டவற்றை சிரமங்களுக்கிடையே செலுத்தப்பட்டுவருகிறது.
மத்திய அரசு மானியத்தோடு வழங்கப்பட்டு வரும் இ-ஆட்டோவிற்கு இது போன்ற நடைமுறைகள் எதுவும் இல்லை என தெரிய வருகிறது. நாங்கள் இயக்கும் ஆட்டோக்களுக்கான எரிபொருளுக்காக அதிக அளவில் செலவு செய்ய வேண்டி உள்ளது. ஆனால் இ-ஆட்டோக்களுக்கு இது போன்ற எந்த ஒரு செலவினமும் இல்லை. அவா்களுக்கு பொ்மிட் இல்லை, அதிகதொலைவு சவாரி செல்ல முடிகிறது. நாங்கள் எரிபொருள் நிரப்பி இயக்கும் ஆட்டோக்கள் குறிப்பிட்ட கி.மீ. எல்லையாக வைத்து இயக்க அறிவுறுத்தப்படுகிறது.
எனவே எங்களது ஆட்டோ இயக்கப்படும் தொலைவை விரிவாக்கவும், இ-ஆட்டோக்களுக்கு ஓன் போா்டு, டீ போா்டு என வரையறை செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.