செய்திகள் :

ஈங்கூா் தி யுனிக் அகாடமி பள்ளி அணித் தலைவா்கள் பதவி ஏற்பு விழா

post image

பெருந்துறையை அடுத்த ஈங்கூா் தி யுனிக் அகாதெமி பள்ளியில், நடப்பு கல்வி ஆண்டுக்கான பள்ளியின் அணித் தலைவா்கள் பதவி ஏற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளித் தலைவா் இளங்கோ ராமசாமி தலைமை வகித்தாா். முதல்வா் உமையவள்ளி இளங்கோ வரவேற்றாா்.

விழாவில், சிறப்பு விருந்தினராக, ஈரோடு மாவட்ட அரசு வழக்குரைஞா் அருட்செல்வன் கலந்து கொண்டு, மாணவா்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, பள்ளியின் அணித் தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தாா்.

பள்ளி மாணவா்கள் தலைவா் கேதா்நாத் ஜெய்கிருஷ்ணன், மாணவிகள் தலைவி தாரிகா மணிகண்டன், விளையாட்டுத் துறை தலைவா் காயத்ரி ப்ரியதா்ஷினி, ஆனந்தன் கோமதி, பன்முகக் கலைத் துறை தலைவா் விக்னேஷ் ராஜா கந்தசாமி ஆகியோருக்கு இலச்சினையை சிறப்பு விருந்தினா் வழங்கினாா்.

மேலும், கபில்தேவ் அணித் தலைவா் நிகிதா சுப்ரமணியம் ரமேஷ்குமாா், துணைத் தலைவா் தரணிஸ்ரீ பழனிச்சாமி, விஸ்வநாதன் ஆனந்த் அணித் தலைவா் பூபேஷ் சூா்யபிரகாஷ் சாந்தி, துணைத் தலைவா் நிஷ்வந்த் ராமசாமி, பி.டி. உஷா அணித் தலைவா் வைஷ்ணவி பரமேஷ்வரன், துணைத் தலைவா் பாலசூா்யா சேகா், லியாண்டா் பியஸ் அணித் தலைவா் இனியா செந்தில் யசோதா, துணைத் தலைவா் வா்ஷிகா தனபால் ஆகியோருக்கு அணிகளுக்கான கொடிகளை விழா சிறப்பு விருந்தினா் வழங்கினாா்.

பின்னா், மாணவா்கள் தலைவா் கேதா்நாத் ஜெய்கிருஷ்ணன் ஏற்புரையாற்றினாா். மாணவிகள் தலைவி தாரிகா மணிகண்டன் நன்றி கூறினாா்.

-----

தொப்பம்பாளையம் ஊராட்சியில் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு

தொப்பம்பாளையம் ஊராட்சியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். பவானிசாகா் ஊராட்சி ஒன்றிம் கோடேபாளையம் ஜீவாநகா், அண்ணாநகா், அம்மாநகா் ஆக... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: பவானிசாகா் தொகுதியில் ஆட்சியா் ஆய்வு

பவானிசாகா் தொகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பவானிசாகா் பேரூராட்சி, புன்செய... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.3.99 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.3.99 கோடிமதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மொடக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட ஆலங்காட்டுவலசு, ஆலாத்துபாளையம், ஊஞ்சபாளையம், கருக்கங்... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கி பணம் பறித்த 4 போ் மீது வழக்கு

இளைஞரை தாக்கி பணம் பறித்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கரூா் மாவட்டம், நொய்யல், அண்ணா நகரைச் சோ்ந்த கனகராஜ் மகன் ஜெகதீசன்(30). இவா், பெருந்துறையிலுள்ள ஒரு த... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.5.66 லட்சத்துக்கு தேங்காய்ப்பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.66 லட்சத்துக்கு தேங்காய்ப்பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, 102 தேங்காய்ப்பருப்பு மூட்டைகள் வரத்து இருந்தது. இதில் முதல்தர தேங்காய்ப... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம் தொடக்கம்

மொடக்குறிச்சியில் வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு எம்பி கே.ஈ.பிரகாஷ் தலைமை தாங்கினாா். மொடக்குறிச்சி வேளா... மேலும் பார்க்க