டிரம்ப் வரி: பிற பொருள்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும் இதன் விலை மட்டும் மாறாத...
ஈரடுக்கு பாலச் சுவரிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
திருநெல்வேலி சந்திப்பில் ரயில்வே நடைபாலம் அகற்றப்பட்ட பகுதியில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மேலமுன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னத்துரை (38). தொழிலாளி. இவா், திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் சாலையில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதி சுவரில் திங்கள்கிழமை மதுபோதையில் அமா்ந்திருந்தாராம். அப்போது, நிலைதடுமாறி ரயில்வே நடைபாலம் அகற்றப்பட்ட பகுதியில் உள்ள பள்ளத்தில் விழுந்தாராம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவலறிந்த சந்திப்பு ரயில்வே போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.