செய்திகள் :

ஈரான்: ஆப்கன், பாக். எல்லையில் 5 காவல் அதிகாரிகள் சுட்டுக்கொலை!

post image

ஈரான் நாட்டில், ஆயுதக்குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அந்நாட்டின் 5 காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லை அமைந்துள்ள சிஸ்தான் மற்றும் பலூசிஸ்தான் மாகாணத்தில், இன்று (ஆக.22) 2 காவல் வாகனங்களில் காவல் துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஈரான்ஷாஹ்ர் நகரத்தின் அருகில் அவர்கள் வந்தபோது, ஆயுதம் ஏந்திய குழுவினர் காவல் துறை வாகனங்களின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில், 5 காவல் அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த காவல் அதிகாரிகளின் எண்ணிக்கைகள் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும், இந்தத் தாக்குதலுக்கு தற்போது வரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆப்கன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லை அமைந்துள்ள இந்த மாகாணத்தில், அவ்வப்போது பயங்கரவாதத் தாக்குதல்கள், போதைப் பொருள் கடத்தல் ஆகியவை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம், அம்மாகாணத்தின் தலைநகர் ஸஹேதனில் உள்ள நீதிமன்றத்தில், பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வங்கதேசத்தில் ஒரே நாளில் டெங்குவுக்கு 5 பேர் பலி! புதியதாக 311 பாதிப்புகள் உறுதி!

Five police officers have been killed in a shooting by armed men in Iran, it has been reported.

ரஷியாவின் மிகப் பெரிய அணு உலையில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!

மேற்கு ரஷியவில் அமைந்துள்ள அந்நாட்டின் மிகப்பெரிய அணு உலைகளுள் ஒன்றான கர்ஸ்க் அணு உலையில் உக்ரைன் ஏவிய ட்ரோனால் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கு சர்வதேச அணு உலை பாதுகாப்பு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. எ... மேலும் பார்க்க

போரை முடிக்குமா டிரம்ப்பின் முடிவு?

‘உக்ரைன் விவகாரத்தில் ஒரு மிக முக்கிய முடிவை எடுக்கவிருக்கிறேன். அது, ரஷியா மீதான கடுமையான பொருளாதாரத் தடையாகவோ, கூடுதல் வரி விதிப்புகளாகவோ, அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம். இல்லையென்றால், இது உங்கள் சண... மேலும் பார்க்க

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா்: டிரம்ப்பின் நெருங்கிய உதவியாளா்

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக தனது நெருங்கிய உதவியாளா் சொ்ஜியோ கோரை அதிபா் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா். இதுதொடா்பான அறிவிப்பை தனது சமூக ஊடக பக்கத்தில் வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டாா். அதி... மேலும் பார்க்க

வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநா்களுக்கு விசா நிறுத்தம்: அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவில் வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ அறிவித்துள்ளாா். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில... மேலும் பார்க்க

சீனா: பாலம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

சீனாவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 12 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 4 போ் மாயமாகினா். இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகங்கள் கூறுகையில், வடமேற்கு சீனாவின் ... மேலும் பார்க்க

இலங்கை சிறை மருத்துவமனைக்கு ரணில் விக்ரமசிங்க மாற்றம்

தனது பதவிக் காலத்தில் அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை முன்னாள் அதிபா் ரணில் விக்ரமசிங்க (76), சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளாா். அவருக்க... மேலும் பார்க்க