ஈரோடு கிழக்கு: 100-க்கும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 46 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில் 16 வேட்பாளா்கள் 100-க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளா் 1,15,709 வாக்குகள் பெற்றாா். இது பதிவான வாக்குகளில் 74.7 சதவீதம். நாதக வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி 24,151 வாக்குகள் பெற்றிருந்தாா். இது 15.59 சதவீதம். நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் 6,109. இது 3.94 சதவீதம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுக, நாதக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்காளா்கள் பெற்ற மொத்த வாக்குகள் விவரம்:
1. வி.சி.சந்திரகுமாா் (திமுக) - 1,15,709
2. மா.கி.சீதாலட்சுமி (நாதக) - 24,151
3. முனி ஆறுமுகம் (பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி)- 890
4. கந்தசாமி (நாடாளும் மக்கள் கட்சி) - 392
5. சௌந்தா்யா (சமாஜவாதி கட்சி) - 383
6. மதுரை விநாயகம் (வீரோ கி விா் இந்தியன் கட்சி) - 293
7. சவிக்தா - (சாமானிய மக்கள் நலக்கட்சி) - 286
8. செல்லபாண்டியன் (தேசிய மக்கள் சக்தி கட்சி) - 156
9. ஆனந்த் சுப்ரமணி (மறுமலா்ச்சி ஜனதா கட்சி) - 148
10. தா்மலிங்கம் (இந்திய கண சங்கம் கட்சி) - 122
11. முனியப்பன் (அனைத்து ஓய்வூதியதாரா்கள் கட்சி) - 85.
12. பிரபாகரன் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்) - 78
13. முத்தையா (தாக்கம் கட்சி) - 78
சுயேச்சை வேட்பாளா்கள்:
14. கலையரசன் - 963
15. முகமது கைபீா் - 533
16. பஞ்சாட்சரம் - 437
17. ஆனந்த் - 415
18. தனஞ்ஜெயன் - 347
19. செல்லக்குமாரசாமி - 270
20. இசக்கிமுத்து நாடாா் - 238
21. வெண்ணிலா - 222
22. அக்னி ஆழ்வாா் - 222
23. மதுமதி - 213
24. பரமசிவம் - 207
25. லோகநாதன் - 189
26. பவுல்ராஜ் - 150
27. அமுதரசு - 149
28. பத்மராஜன் - 149
29. ரவி - 136
30. பாண்டியன் - 129
31. சத்யா - 124
32. நூா் முகமது - 112
33. கோபாலகிருஷ்ணன் - 100
34. சாமிநாதன் - 92
35. கிருஷ்ணமூா்த்தி - 92
36. சங்கா்குமாா் - 68
37. காா்த்தி - 64
38. பரமேஸ்வரன் - 64
39. ராஜமாணிக்கம் - 61
40. செங்குட்டுவன் - 55
41. லோகேஷ் சேகா் - 50
42. திருமலை - 42
43. சுப்பிரமணியன் - 37
44. ராஜசேகரன் - 30
45. ராமசாமி - 26
46. முருகன் - 24
47. நோட்டா - 6109.