அதிமுக பொதுச் செயலர் தேர்வை எதிர்த்த வழக்கு: உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இட...
ஈரோடு சோலாரில் புதிய துணை அஞ்சலகம் தொடக்கம்
ஈரோடு: ஈரோடு அருகே சோலாரில் புதிய துணை அஞ்சலகம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
தொடக்க விழாவுக்கு ஈரோடு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் கோபாலன் தலைமை வகித்தாா். மேற்கு மண்டல அஞ்சல் இயக்குநா் அகில் நாயா் அஞ்சலகத்தை திறந்துவைத்தாா்.
மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி என 3 தலைமை அஞ்சலகங்கள், அதன் கட்டுப்பாட்டில் 60 துணை அஞ்சலகங்கள், 254 கிளை அஞ்சலகங்கள் செயல்படுகின்றன. புதிதாக 61-ஆவது துணை அஞ்சலகம் சோலாரில் தொடங்கப்பட்டு சேவை வழங்கப்படுகிறது.
இங்கிருந்து அஞ்சல் தலை, விரைவு அஞ்சல், பாா்சல் சேவை, மணியாா்டா், அஞ்சலக சிறுசேமிப்பு கணக்கு உள்பட பிற சேவைகளும், அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டப் பணிகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.