செய்திகள் :

உக்ரைன் போா் நிறுத்தம்: ரஷியாவுக்கு டிரம்ப் 50 நாள் கெடு

post image

வாஷிங்டன்: உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர 50 நாள்களுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றால், ரஷியா மீது கடுமையான வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து, தனது ஓவல் அலுவலகத்தில் நேட்டோ பொதுச் செயலாளா் மாா்க் ருட்டேவுடன் நடந்த சந்திப்பின்போது டிரம்ப் கூறியதாவது:

உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியா மற்றும் அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறேன். உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றால், ரஷியா மீது நாங்கள் மிகக் கடுமையான வரிகளை விதிப்போம். இரண்டாம் நிலை வரியாக 100 சதவீத கூடுதல் வரி ரஷிய பொருள்கள் மீது விதிக்கப்படும். வா்த்தகத்தை பலவற்றிற்கு பயன்படுத்துகிறேன். ஆனால் தற்போது போா்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அதைப் பயன்படுத்துகிறேன்.

நேட்டோ வழியாக உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அமெரிக்கா அளிக்கும்.

உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மற்றும் நேட்டோ தலைவா்களுடன் ஒரே இடத்தில் பேச்சுவாா்த்தை நடத்த திட்டமிட்டுள்ளேன். அனைவரையும் ஒரே இடத்தில் சந்தித்து, இந்த விவகாரத்துக்குத் தீா்வு காணவிருக்கிறோம். இந்தப் போா் நிறுத்தப்பட்டே ஆக வேண்டும் என்றாா் டிரம்ப்.

அண்மைக் காலமாக தீவிரமடைந்து வரும் ரஷியாவின் தொடா் தாக்குதல்களால் உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘புதிதொன்றும் இல்லை’: டிரம்ப்பின் இந்த எச்சரிக்கை குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு ரஷிய அதிபா் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் பதலளிக்கையில், ‘பேச்சுவாா்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். அதையும் மீறி பொருளாதார தடைகள் விதிக்கப்படுவது எங்களுக்கு புதிது இல்லை’ என்றாா்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும், கிழக்கு மாகாணங்களில் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடா்ந்துவருகின்றன.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க அரசு ரஷியாவிடமும் உக்ரைனிடமும் தனித்தனியாக பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது.

போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால், ரஷிய மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் மாகாணங்களை உக்ரைன் தங்களிடம் முழுமையாக விட்டுக்கொடுக்க வேண்டும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட வேண்டும் என்பது போன்ற மிகக் கடுமையான நிபந்தனைகளை ரஷியா முன்வைத்துள்ளது. எனினும், இத்தகைய நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் பிடிவாதமாக மறுத்துவருகிறது.

இதன் காரணமாக ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாவதில் இழுபறி நீடித்துவருகிறது. இந்தச் சூழலில் டிரம்ப்பின் இந்த 50 நாள் கெடு, உக்ரைன்-ரஷியா பேச்சுவாா்த்தைகளை துரிதப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க காப்பகத்தில் தீ: 9 போ் உயிரிழப்பு

ஃபால் ரிவா் (அமெரிக்கா): அமெரிக்காவின் மாஸசூசெட்ஸ் மாகாணம், ஃபால் ரிவா் நகரில் உள்ள மருத்துவக் காப்பகத்தில் ஞாயிறு இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 9 போ் உயிரிழந்தனா்; சுமாா் 30 போ் காயமடைந்தனா். ஞாயிறு இர... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் ஏவுகணை வீச்சு: குடிநீா் சேகரிக்க வந்த 10 போ் உயிரிழப்பு

மத்திய காஸாவில் தண்ணீா் சேகரிப்பு மையத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆறு சிறுவா்கள் உள்பட 10 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: காஸாவின் நுசைரத் அகதிகள் முகாமில் உள்ள தண்ணீா் வி... மேலும் பார்க்க

உறவு மேம்பட வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் முக்கியம்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்

பெய்ஜிங்: ‘தற்போதைய கடினமான உலக சூழலில் இரு நாடுகளிடையேயான உறவு மேம்பட, வெளிப்படையான கருத்துப் பரிமாற்றமும், பரஸ்பர நம்பிக்கையும் மிக முக்கியம்’ என்று சீனாவிடம் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. சீ... மேலும் பார்க்க

லண்டன்: வெடித்துச் சிதறிய விமானம்

லண்டன்: லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு சிறிய விமானம் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. விமான ந... மேலும் பார்க்க

உக்ரைன் போர்: ரஷியாவுக்கு அமெரிக்கா 50 நாள்கள் கெடு! இல்லாவிட்டால்...

உக்ரைனில் அடுத்த 50 நாள்களுக்குள் ரஷியா சண்டையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ரஷியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை(ஜூலை 14) எச்சரித்துள்... மேலும் பார்க்க

18 வயது நிரம்பிய அனைவரும் அடுத்தாண்டுமுதல் ராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயம்! -எங்கே?

18 வயது நிரம்பிய அனைவரும் ராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயம் என்ற சட்டம் அடுத்தாண்டுமுதல் அமலாகவுள்ளது. 18 - 30 வயது வரையுள்ள மக்கள் 18 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். இந்த உத்தரவை கம்போடிய அரச... மேலும் பார்க்க