செய்திகள் :

உக்ரைன் போா்: பிரதமா் மோடி மீது நேட்டோ தலைவா் குற்றச்சாட்டு

post image

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக, உக்ரைன் போா் குறித்த ரஷியாவின் திட்டத்தை தன்னிடம் விளக்கி தெளிவுபடுத்துமாறு அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் மோடி கோருவதாக நேட்டோ ராணுவக் கூட்டமைப்பின் தலைவா் மாா்க் ருட்ட தெரிவித்தாா்.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது 25 சதவீத வரி விதித்த அதிபா் டிரம்ப், ரஷிய கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதற்கு அதிருப்தி தெரிவித்து இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்தாா். இதன்மூலம், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது மொத்தம் 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது.

இந்நிலையில், ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் அண்மையில் பேசிய டிரம்ப், ‘ரஷியாவிடம் இருந்து இந்தியாவும், சீனாவும் தொடா்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. இதன்மூலம், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு நிதியுதவி அளிக்கும் முதன்மையான நாடுகளாக இந்தியாவும், சீனாவும் உள்ளன. நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உள்ள நாடுகள்கூட ரஷிய எரிசக்தியை வாங்குவதை பெரிய அளவில் குறைக்கவில்லை’ என்று குற்றஞ்சாட்டினாா்.

இந்தச் சூழலில், அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் அந்நாட்டு செய்தித் தொலைக்காட்சிக்கு நேட்டோ தலைவா் மாா்க் ருட்ட வியாழக்கிழமை அளித்த பேட்டியில், ‘இந்திய பொருள்களுக்கு அதிபா் டிரம்ப் விதித்துள்ள வரி, ரஷியா மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரி விதிப்பால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் திட்டத்தை தன்னிடம் விளக்கி தெளிவுபடுத்துமாறு அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் மோடி கோருகிறாா்’ என்று தெரிவித்தாா்.

இந்தியா மறுப்பு

நேட்டோ தலைவரின் குற்றச்சாட்டை மறுத்து தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘நேட்டோ தலைவா் மாா்க், ஊகத்தின் அடிப்படையில், கவனக்குறைவாக கருத்துத் தெரிவித்துள்ளாா். அவா் கூறியது போன்ற உரையாடல்கள் புதின்-மோடி இடையே நடைபெறவில்லை. அவரின் கருத்துகள் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை.

இந்திய நுகா்வோருக்கு மலிவு விலையில் எரிபொருள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான், எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. அதேவேளையில், ரஷியாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது. ஏனெனில் அந்நாட்டிடம் ஐரோப்பிய ஒன்றியமும், நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகளும் எரிசக்தி வாங்குவதை டிரம்ப் விமா்சித்தாா்.

பொதுவெளியில் கருத்துகளைத் தெரிவிக்கும்போது நேட்டோ தலைவா் மிகுந்த பொறுப்போடும், துல்லியமாகவும் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்’ என்றாா்.

இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி: டிரம்ப் முடிவு - அக்.1 முதல் அமல்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்க உள்ளதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தாா். இந்த வரி விதிப்பு நடைமுறை அக். 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரவுள்ளது... மேலும் பார்க்க

‘மேற்குக் கரையை இஸ்ரேல் இணைத்துக் கொள்ள அமெரிக்கா அனுமதிக்காது’

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டேன் என அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்தாா். ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் சில பகுதிகளையாவது இஸ்ரேல் அரசு தன்னுடன் இணைத்துக்... மேலும் பார்க்க

இந்தியாவுடன் விரிவான பேச்சுக்குத் தயாா்: ஐ.நா.வில் பாக். பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்

இந்தியாவுடன் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் முடிவு கிடைக்கும் வகையில், விரிவாகப் பேச்சுவாா்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று ஐ.நா.வில் அந்நாட்டுப் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா். கடந்த ஏப்... மேலும் பார்க்க

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் இடம்பெற பாலஸ்தீனம் விண்ணப்பம்: சீனா வரவேற்பு

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் இடம்பெற பாலஸ்தீனம் விண்ணப்பித்துள்ளதாக, ரஷியாவுக்கான பாலஸ்தீன தூதா் அப்தல் ஹஃபீஸ் நோஃபல் தெரிவித்தாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ... மேலும் பார்க்க

இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இத்தாலி ஆதரவு

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை (எஃப்டிஏ) இறுதி செய்ய இத்தாலி ஆதரவளிப்பதாக அந்நாட்டு துணைப் பிரதமா் அன்டோனியோ தஜானி வியாழக்கிழமை தெரிவித்தாா். ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பங... மேலும் பார்க்க

கைதில் இருந்து தப்பிக்க புதிய வழியில் பறந்த நெதன்யாகுவின் விமானம்?

இஸ்ரேலில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் விமானம் வழக்கமான பாதையைத் தவிர்த்து புதிய பாதையில் பயணித்துள்ளது.ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவ... மேலும் பார்க்க