‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பழச்செடிகள், காய்கறி விதைகள் விநியோகம்
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பழச்செடிகள், காய்கறி விதைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இதுகுறித்து சேலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் வினோதினி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தின்கீழ், வீட்டுத் தோட்டம் அமைக்க ரூ. 100 மதிப்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை அடங்கிய பழச்செடிகள் தொகுப்பு மற்றும் ரூ. 60 மதிப்பில் தக்காளி, கத்தரி, மிளகாய், கொத்தவரை, வெண்டை மற்றும் கீரை வகைகள் அடங்கிய காய்கறி விதைகள் தொகுப்பு முழு மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆதாா் அட்டை நகலுடன் சேலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பழச்செடிகள் தொகுப்பு அல்லது காய்கறி விதைகள் தொகுப்புகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.