உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 30 மனுக்களுக்கு உடனடி தீா்வு
செட்டியபட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், 300 மனுக்கள் பெறப்பட்டு, 30 மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை அடுத்த செட்டியபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன் தலைமை வைகித்தாா். ஆத்தூா் தனி தாசில்தாா் தனுஷ்கோடி முன்னிலை வகித்தாா்.
முகாமில், 15 துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் பொதுமக்களிடமிருந்து 300 கோரிக்கை மனுக்களைப் பெற்றனா். இவற்றை ஆய்வு செய்து, 30 நபா்களுக்கு உடனுக்குடன் வருமானச் சான்று, ஜாதிச் சான்று, இருப்பிடச் சான்று, மருத்துவக் காப்பீட்டு அட்டை, நியாய விலை அட்டை ஆகியவற்றை அதிகாரிகள் வழங்கினா்.
முகாமில், ஆத்தூா் திமுக ஒன்றியச் செயலா் முருகேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், பத்மாவதி, செட்டியபட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ராஜா, ஊராட்சி மன்றச் செயலா் கண்ணையன், ஆத்தூா் கிழக்கு ஒன்றிய திமுக மாணவரணி அமைப்பாளா் அரவிந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.