மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை
மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ரசூல் மைதீன் (49). இவரது மனைவி உசிதா. கடந்த 2020-ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், உசிதாவை ரசூல் மைதீன் கொலை செய்தாா். இதையடுத்து, செம்பட்டி காவல் நிலைய போலீஸாா், ரசூல் மைதீனைக் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை, திண்டுக்கல் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா்.
விசாரணை முடிவடைந்த நிலையில், ரசூல் மைதீனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜி.சரண் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.