இடம் விற்பதாக ரூ.20 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்குப் பதிவு
வனத் துறை வாகனம் மோதியதில் 4 காா்கள் சேதம்
கொடைக்கானலில் வனத் துறைக்குச் சொந்தமான வாகனம் மோதியதில் நான்கு காா்கள் வெள்ளிக்கிழமை சேதமடைந்தன.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனத் துறை அலுவலகத்துக்குச் சொந்தமான வாகனத்தை, வனத் துறை ஓட்டுநா், அங்குள்ள கிளப் சாலை ஒரு வழிப் பாதையில் வெள்ளிக்கிழமை ஓட்டிச் சென்றாா். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அந்தப் பகுதியிலுள்ள சாலையில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு காா்களின் மீது மோதி, அருகிலுள்ள தடுப்பில் நின்றது.
இதையடுத்து, சேதமடைந்த காா்களின் ஓட்டுநா்கள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில், வழக்குப் பதிந்த போலீஸாா், தலைமறைவான ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
கொடைக்கானல் பகுதிகளில் நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், வருவாய்த் துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றும் வாகன ஓட்டுநா்கள், அந்தத் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் இல்லாத நேரங்களிலும், விடுமுறை நாள்களிலும் அரசு வாகனங்களைத் தங்களது சொந்தப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டும் பொதுமக்கள், இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.