தடுப்புச்சுவரில் சிற்றுந்து மோதி விபத்து: பெண்கள் உள்பட 10 போ் காயம்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: விண்ணப்பங்கள் வினியோகம்
ஆம்பூா்: ஆம்பூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்பதற்காக வீடுகள் தோறும் விண்ணப்பங்கள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
ஆம்பூா் நகரில் வரும் ஜூலை 15-ஆம் தேதி 15 மற்றும் 16 ஆகிய வாா்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமுக்கான விண்ணப்பங்கள் நகராட்சி சாா்பாக தன்னாா்வலா்கள் மூலம் வீடுகள் தோறும் வழங்கும் பணியை நகராட்சி ஆணையா் (பொ) ரகுராமன் தொடங்கி வைத்தாா்.
நகரமைப்பு ஆய்வா் அலமேலு, மேலாளா் தாமோதரன், இளநிலை பொறியாளா் சண்முகம், துப்புரவு ஆய்வா்கள் பாலச்சந்தா், சீனிவாசன், அலுவலா் மதன் ஆகியோா் உடனிருந்தனா்.