செய்திகள் :

`உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார்...' - எஸ். கே குறித்து நெகிழும் டூரிஸ்ட் பேமிலி இயக்குநர்

post image

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்திருக்கும் `டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மே.1-ம் தேதி வெளியானது. இலங்கையிலிருந்து தமிழ் குடும்பம் ஒன்று அங்கிருந்து தப்பி தமிழகம் வருகின்றனர்.

டூரிஸ்ட் பேமிலி படக் குழுவுடன் சிவகார்த்திகேயன்
டூரிஸ்ட் பேமிலி படக் குழுவுடன் சிவகார்த்திகேயன்

இங்கு தங்களின் வாழ்க்கையைத் துவங்க அவர்கள் என்னென்ன சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை நகைச்சுவை பாணியில் உணர்வுப்பூர்வமாக கூறியிருந்தனர். ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் ரூ. 20 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்து அசத்தியுள்ளது. இந்த நிலையில், 'டூரிஸ்ட் ஃபேமிலி' படக் குழுவினரை அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாரட்டியிருக்கிறார்.

இது குறித்து 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``எங்களை அழைத்து எங்கள் 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் குறித்த உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி சிவகார்த்திகேயன் சார்... உங்கள் அன்பான வார்த்தைகளும் கருத்துகளும் உண்மையிலேயே எங்களுக்கு நிறைய மதிப்பளித்தது.

இயக்குநருடன் சிவகார்த்திகேயன்
இயக்குநருடன் சிவகார்த்திகேயன்

உங்களின் கருத்துக்களைக் கேட்பது நம்பமுடியாத அளவிற்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. மேலும் ஒரு குழுவாக, நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது போன்ற தருணங்கள் எங்களை இன்னும் அழகான, இதயப்பூர்வமான கதைகளைப் பாடமாக்கத் தூண்டுகிறது" எனப் பதிவிட்டிருக்கிறார்.

Thug Life: "விண்வெளி நாயகா பாடல் உருவான கதை இதுதான்!" - கார்த்திக் நேத்தா பேட்டி

‘தக் லைஃப்’ திரைப்படம் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவுக்கு புதிய வாசலைத் திறந்து வைத்திருக்கிறது. ஆம், ரஹ்மான் இசைக்கு இப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார். ரஹ்மான் இசையமைக்கும் மெட்டுக்கு க... மேலும் பார்க்க

Dhanush: `மகனே வா!' - யாத்ராவை கட்டியணைத்து நெகிழ்ந்த தனுஷ், ஐஸ்வர்யா; வாழ்த்திய ரஜினி

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் 2008-ல் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சு... மேலும் பார்க்க

Ravi Mohan: "கடவுளின் அருளால் அனைத்தும் நன்றாக நடக்க வேண்டும்"- நடிகர் ரவி மோகன்

தென்னிந்திய ஸ்ட்ரீட் கிரிக்கெட் லீக் (Southern Street Premier League) நிகழ்ச்சி ஒன்றில் ரவி மோகன் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ரவி மோகன், “என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு மிக்... மேலும் பார்க்க

Saregamapa: "சிவகார்த்திகேயன் சார் ஏன் அழுதார்னு தெரில!" - 'சரிகமப' மஹதி பேட்டி

'சரிகமப' லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிறைவடைந்திருக்கிறது. திவினேஷ் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவரைத் தாண்டி பைனல்ஸுக்கு மொத்தமாக 6 போட்டியாளர்கள் வந்திருந்தனர். இந்த 6 நபர்களில் ... மேலும் பார்க்க

What to watch on OTT: 'ரெட்ரோ', 'துடரும்' - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

இந்த வார ஓடிடி வெளியீடுகளின் பட்டியல்INTERROGATION (HINDI)கொலை செய்யப்படும் நீதிபதியும், கொலையின் காரணத்திற்கான விசாரணையும் என விரைகிறது இந்த 'இன்டரோகேஷன்'.INTERROGATION (HINDI)நடிகர்கள் தர்ஷன் ஜரிவால... மேலும் பார்க்க