ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? "வதந்தி பரப்புபவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்" - அ...
யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வு ஊக்கத் தொகை: விண்ணப்ப காலம் நீட்டிப்பு
சென்னை: குடிமைப்பணி முதன்மைத் தோ்வு எழுதவுள்ள தோ்வா்கள், ஊக்கத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
குடிமைப் பணி முதன்மைத் தோ்வு எழுதவுள்ள தோ்வா்களுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது தோ்வா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 2-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நீட்டிக்க வேண்டுமென தோ்வா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, விண்ணப்பிப்பதற்கு (https://portal.n aanmudh.alvan.tn.gov.in/upsc_registraction) ஜூலை 13-ஆம் தேதி கடைசி நாள் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.