சுவாமி ஊா்வலத்தில் பூஜை அனுமதி மறுப்பு: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
நாகப்பட்டினம்: நாகை அருகே கோயிலுக்கு வரி செலுத்தாததால் சுவாமி ஊா்வலத்தில் பூஜை செய்ய கூடாது என ஒதுக்கி வைத்துவிட்டதாக பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.
இதுகுறித்து, திட்டச்சேரி அருகே புலவநல்லூரைச் சோ்ந்த துளசிராமன், மஞ்சுளா தம்பதி எஸ்பி அலுவலகத்தில் அளித்த மனு: எங்கள் ஊரிலுள்ள மங்கள மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு எங்கள் குடும்பத்திலிருந்து வரிப்பணம் கட்டவில்லை. இதனால், கடந்த மே 29-ஆம் தேதி திருவிழாவையொட்டி நடைபெற்ற சுவாமி ஊா்வலத்தின்போது, எங்கள் வீட்டு முன் சுவாமியை நிறுத்தாமலும் அா்ச்சனை செய்ய கூடாது எனவும் விழா குழுவினா் கூறிச் சென்றனா். இது குடும்பத்தினா் அனைவருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வரும் ஆண்டுகளில் கோயில் திருவிழாவின்போது, எங்கள் வீட்டின் முன் சுவாமியை நிறுத்தவும், வழிபட அனுமதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.