திருப்புவனம் லாக்கப் மரணம்: "கால் இடறி கீழே விழுந்ததில், வலிப்பு ஏற்பட்டு மரணம்"...
அட்சயலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
கீழ்வேளூா்: கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது.
தொடா்ந்து பஞ்சமூா்த்திகளுக்கு அபிஷேகம், வலது பாத நடராஜா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மாலை கோயிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சீா்வரிசை எடுத்து பிரதான வீதிகள் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனா். தொடா்ந்து மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு வைபவங்கள் நடைபெற்றன.
பின்னா், மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம், கன்னியா தானம் நடைபெற்று அட்சயலிங்க சுவாமிக்கும் சுந்தர குஜாம்பிகை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. திரளானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை அன்னை அஞ்சு வட்டத்தம்மன் பௌா்ணமி வழிபாட்டுக் குழுவினா் செய்திருந்தனா்.
