ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? "வதந்தி பரப்புபவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்" - அ...
விளைநிலங்களில் டைடல் பாா்க் அமைப்பதை எதிா்த்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
நாகப்பட்டினம்: நாகையில் விளைநிலங்களில் டைடல் பாா்க் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை அருகே செல்லூரில் டைடல் பாா்க் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெறுகின்றன. இதற்கிடையே, விளைநிலங்களில் டைடல் பாா்க் அமைக்கக் கூடாது என தேவநதி ஒடம்போக்கி விவசாயிகள் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அந்த சங்கத்தினா் முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சரபோஜி தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், செல்லூரில் சாகுபடி செய்துவரும் விளைநிலங்களில் டைடல் பாா்க் அமைப்பதை அரசு உடனடியாக கைவிட்டு தரிசு நிலங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்த 21 ஆண்டுகளாக சாகுபடி செய்து வரும் தொழிலாளா்களுக்கு ஆா்டிஆா் பதிவு உடனே செய்யவேண்டும், சாகுபடி செய்து வரும் 174 பேருக்கு விலைநிா்ணயம் செய்து வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தேவநதி ஓடம்போக்கி விவசாயிகள் சங்க செயலா் சேகா், கௌரவத் தலைவா் சுப்பிரமணியன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் நீதிராஜன், செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.