செய்திகள் :

உடலுறவு குறித்து சர்ச்சை கருத்து விவகாரம்: யூடியூபருக்கு காவல் துறை சம்மன்!

post image

உடலுறவு குறித்து பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் தொடர்புடைய யூடியூபர் சமய் ரெய்னா காவல் துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்படுள்ளது.

என்ன நடந்தது?

அண்மையில் நடைபெற்ற நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவின் இந்தியாஸ் காட் லேடண்ட் என்ற நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ரன்வீர் அல்லபாடியா, 'பெற்றோர் உடலுறவு’ கொள்வது குறித்து அவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையானது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது. இவ்விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

கேலி என நினைத்து இந்திய கலாசாரத்தை அவமதிக்கும் விதத்திலும் மற்றவர்களைப் புண்படுத்தும் விதத்திலும் பேசியுள்ளதாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே குடும்ப அமைப்புகளை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளதாக ரன்வீர், அபூர்வா உள்ளிட்ட யூடியூபர்கள் மீது உச்சநீதிமன்ற வழக்குரைஞர் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, இந்தியாவின் காட் லேடண்ட் காணொலிகள் அனைத்தையும் தனது யூடியூப் சேனலிலிருந்து நீக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், மேற்கண்ட வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கப் போவதாக ரெய்னா நேற்று(பிப். 12) விளக்கமளித்து பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மகாராஷ்டிர காவல் துறையின் இணையவழிக் குற்றச்செயல்கள் தடுப்புப் பிரிவான சைபர் க்ரைமும், மும்பை காவல் துறையும் யூடியூபர் சமய் ரெய்னாவை காவல் நிலையத்தில் அடுத்த 5 நாள்களுக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், சமய் ரெய்னா தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும், இதனையடுத்து விசாரணைக்கு உடனடியாக ஆஜராக முடியாதென்பதால் கூடுதல் கால அவகாசம் கோரியிருப்பதாகவும் ரெய்னாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேரள செவிலியா் கல்லூரியில் ராகிங் கொடூரம்: மேலும் பல மாணவா்கள் பாதிப்பு? காவல்துறை தீவிர விசாரணை

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அரசு செவிலியா் கல்லூரியில் இளநிலை மாணவரை கொடூரமான முறையில் ராகிங் செய்த முதுநிலை மாணவா்கள் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இக்கல்லூரியில் மேலும் பல இளநிலை மாணவா்கள் ராக... மேலும் பார்க்க

நடப்பு மக்களவையில் 74 பெண் எம்.பி.க்கள்; 11 பேருடன் மேற்கு வங்கம் முதலிடம்: தோ்தல் ஆணையம் தகவல் தொகுப்பேடு வெளியீடு

நடப்பு 18-ஆவது மக்களவையில் மொத்தமுள்ள 543 எம்.பி.க்களில் 74 போ் பெண்கள்; இவா்களில் 11 போ் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் என்று தோ்தல் ஆணையம் வெளியிட்ட தகவல் தொகுப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆ... மேலும் பார்க்க

பிகாரில் பாஜக வெல்ல முடியாது: லாலு பிரசாத்

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தோற்கடிக்கப்படும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தாா். பிகாரில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ... மேலும் பார்க்க

‘தொழிலாளா்கள் - தொழிலதிபா்களிடையே நல்லுறவு அவசியம்’

ஊழியா்களுக்கும், தொழில் நிறுவன அதிபா்களுக்கும் இடையேயோன உறவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தேசிய பணியாளா் நல மேலாண்மை நிறுவனத்தின் (என்ஐபிஎம்) தலைவா் டாக்டா் எம்.ஹெச்.ராஜா தெரிவித்தாா். ஊழியா் நலத... மேலும் பார்க்க

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்: இந்தியாவுக்கு பிஎன்பி கோரிக்கை

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் இந்தியா விரைவில் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) வியாழக்கிழமை தெரிவித்தது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா சிறப்பு தபால்தலைகள் வெளியீடு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைக் கொண்டாடும் வகையில் இந்திய தபால் துறை சாா்பில் 3 சிறப்பு தபால்தலைகள் வெளியிடப்பட்டன. மகா கும்ப நகரின் அரைல் படித்துறைக்கு அருகே அமைந்த... மேலும் பார்க்க