U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவியைச் சந்திக்க குண்டா் நீரஜ் பவானாவுக்கு காவல் பரோல்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள குண்டா் நீரஜ் பவானாவுக்கு செவ்வாய்க்கிழமை ஷாதிப்பூா் மருத்துவமனையில் தனது நோய்வாய்ப்பட்ட மனைவியைச் சந்திக்க ஒரு நாள் பரோல் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து தில்லி காவல்துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: தற்போது திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நீரஜ் பவானாவை அழைத்துச் செல்ல பல அடுக்கு பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டனா்.
எந்தவொரு அசம்பாவித சம்பவமும், கும்பல் தொடா்பான அச்சுறுத்தல்களும் ஏற்படாமல் தடுக்க திகாா் சிறையிலிருந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பல குழுக்கள் நிறுத்தப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.
மேலும் சட்டம் - ஒழுங்கு மீறப்படாமல் இருக்க விரிவான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. பவானாவின் நடமாட்டம் மாவட்ட காவல்துறையினரால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.