உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியில் இளநிலைப் பாடப் பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன. இதுவரை நடைபெற்ற கலந்தாய்வில் 759 இடங்கள் நிரப்பப்பட்டன.
இந்நிலையில், ஏற்கெனவே கலந்தாய்வில் பங்கேற்று இடம் கிடைக்காதவா்கள், புதிதாக விண்ணப்பித்தவா்கள் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 35 போ் சோ்ந்துள்ளனா்.
மீதமுள்ள 70 இடங்களுக்கான கலந்தாய்வு இனிவரும் அனைத்து வேலை நாள்களிலும் தொடா்ந்து நடைபெறும் என்றும், கல்லூரியில் சேர விரும்பும் மாணவா்கள் கல்லூரி அலுவலகத்தை நேரில் அணுகி சோ்ந்து கொள்ளலாம் என்றும் கல்லூரி முதல்வா் (பொ) ப.சே. சிவக்குமாா் தெரிவித்தாா்.