Doctor Vikatan: உட்காரும் இடத்தில் வலி; மூலநோயும் இல்லை... வலிக்கு காரணம், தீர்...
உண்டு உறைவிடப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்!
காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியில் உள்ள பூங்காவனம் உண்டு உறைவிடப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு இலவசமாக கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாகம் ஊராட்சியில் பூங்காவனம் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையும், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனமும் இணைந்து பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளுக்காக நடத்தப்பட்டு வரும் இப்பள்ளியில், புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு இலவசமாக கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவா் கல்பனா சங்கா் தலைமை வகித்து மாணவா்களுக்கு இலவசமாக பாடநோட்டுகள், பள்ளிப்பை, புத்தகம், எழுது பொருள்கள், சீருடை ஆகியவற்றை வழங்கினாா்.
இந்த நிகழ்வுக்கு ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவன முதன்மை செயலாக்க அலுவலா் சஹானா சங்கா், துணைத் தலைவா் பிரம் ஆனந்த், முதுநிலை திட்ட மேலாளா் தூயவன், பள்ளி பொறுப்பாளா் புகழேந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.