`உண்மையில் இது எனது முதல் 'Fan Boy' மொமன்ட்' - ஏ.ஆர் ரஹ்மான் குறித்து நெகிழ்ந்த சுஷின் ஷ்யாம்
மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான 'கிஷ்மத்' படத்தின் மூலம் அறிமுகமானவர் சுஷின் ஷ்யாம்.
இதனைத் தொடர்ந்து ‘கும்பளாங்கி நைட்ஸ்’,'ட்ரான்ஸ்’, ‘மாலிக்’, ‘மின்னல் முரளி’, ‘பீஷ்ம பருவம்’, ‘ரோமான்சம்’, ‘கண்ணூர் ஸ்குவாட்’ என ஹிட் படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

குறிப்பாக கடந்த வருடம் வெளியான `மஞ்சும்மல் பாய்ஸ்', `ஆவேஷம்' போன்ற திரைப்படங்களுக்கும் ஹிட் இசையைக் கொடுத்திருந்தார்.
கடைசியாக ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் நடிப்பில் வெளியான ‘போகன்வில்லா’ படத்துக்கு இசையமைத்திருந்தார்.
இவரது இசைக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது. இப்படி இசைத்துறையில் கலக்கிக்கொண்டிருக்கும் சுஷின் ஷ்யாமை ஏ.ஆர் ரஹ்மான் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கிறார்.

இதனை நெகிழ்ச்சியாக சுஷின் ஷ்யாம் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்திருக்கிறார். " உண்மையிலேயே இது என்னுடைய முதல் 'Fan Boy' மொமன்ட். உங்கள் அன்புக்கு எனது மனமார்ந்த நன்றி சார்" என்று பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...