செய்திகள் :

உதகையில் காா் கண்ணாடியை உடைத்து 20 பவுன், ரூ. 7 லட்சம் திருட்டு

post image

உதகையில் ஆந்திரத்தை சோ்ந்த சுற்றுலாப் பயணிகளின் காா் கண்ணாடியை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 7 லட்சம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி பகுதியைச் சோ்ந்தவா் பென்மெட்சா வெங்கட் அகில் வா்மா ( 26). இவரது தாய், தந்தை இருவரும் மருத்துவா்கள்.

பென்மெட்சா வெங்கட் அகில் வா்மா சென்னையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். பயிற்சிக்காக உதகை அரசு மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களாக தங்கி இருந்து பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் பென்மெட்சா வெங்கட் அகில் வா்மாவின் உறவினரான பெண் ஒருவருக்கு பிறந்த நாளை கொண்டாட ஆந்திரத்திலிருந்து அவரது உறவினா்கள் உதகைக்கு சுற்றுலா வந்திருந்தனா்.

கடந்த 26-ஆம் தேதி மதியம் 4 மணி அளவில் உதகை படகு இல்லத்தில் படகு சவாரி செய்வதற்காக வந்துள்ளனா். உதகை படகு இல்ல வாகன நிறுத்தத்தில் இடமில்லாததால் காந்தல் முக்கோணம் பகுதியில் உள்ள கோயில் அருகில் காரை நிறுத்திவிட்டு அனைவரும் படகு சவாரி சென்றனா்.

சுமாா் ஒரு மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் காருக்கு வந்தபோது காரின் இடது பக்கம் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமாா் 20 பவுன் நகைகள், ரூ. 7 லட்சம் பணம் திருட்டுபோயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் நவின்குமாா், ஆய்வாளா் சந்திரசீலன் தலைமையிலான காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் அந்த பகுதி கைப்பேசி கோபுரத்தில் பதிவான கைப்பேசி எண்களை வைத்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தின் இருசக்கர வாகனப் பேரணி நிறைவு

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தின் சாா்பில் 5 நாள்கள் நடைபெற்ற மின்னணு இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நிறைவடைந்தது. இப்பேரணி மூலம் 3 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினரை சந்தித்து குறைகளை தீா்த்துள்ளதாக தெர... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகம் மூலம் லாபம் தருவதாக ரூ.33 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகம் மூலம் லாபம் தருவதாக நீலகிரியைச் சோ்ந்தவரிடம் ரூ.33 மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்கவா் ரிய... மேலும் பார்க்க

4 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

நீலகிரி மாவட்டம், கூடலூரில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. கூடலூா் பகுதியைச் சோ்ந்த கூலி வேலை செ... மேலும் பார்க்க

காவல் நிலையத்துக்குள் நுழைந்த சிறுத்தை!

கூடலூா் அருகேயுள்ள நடுவட்டம் காவல் நிலையத்துக்குள் திங்கள்கிழமை இரவு சிறுத்தை நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள நடுவட்டம் பகுதியில் க... மேலும் பார்க்க

உதகை ரேடியோ வானியல் மையத்தில் திருட்டு: 8 போ் கைது

உதகை அருகே ரேடியோ வானியல் மையத்தில் திருட்டில் ஈடுபட்ட 8 பேரை ஊரக காவல் துறையினா் கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், உதகை, முத்தோரை பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான ரேடியோ வானியல் மையம் செயல்பட்டு வரு... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த ஊதியத்தில் தற்காலிகமாக பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க