செய்திகள் :

உதகையில் நீா்ப் பனியின் தாக்கம் அதிகரிப்பு

post image

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீா்ப் பனியின்  தாக்கம் வெள்ளிக்கிழமை காலை அதிகரித்துக் காணப்பட்டது.

உதகையில் கடந்த சில நாள்களாக காலை மற்றும் இரவு நேரத்தில் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  வெள்ளிக்கிழமை காலை நீா்ப் பனி அதிக அளவில் இருந்ததோடு குறைந்தபட்சமாக   7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டதால்   கடும் குளிா் வாட்டியது. இதனால் அதிகாலை நேரங்களில் காய்கறி தோட்டப் பணிக்குச் செல்லும் தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

உதகை சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம், கேத்தி, முத்தோரைப்பாலடா, தொட்டபெட்டா சிகரம், காந்தல், பட்பயா் உள்ளிட்ட பகுதிகளில் நீா்ப் பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. கடும் குளிா் வாட்டியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய ஆட்சியா் அறிவுரை

கா்நாடக மாநிலம், பெங்களூரில் தற்போது எச்எம் தீநுண்மி பரவி வருவதால் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவுறுத்த... மேலும் பார்க்க

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பனிப் பொழிவில் இருந்து மலா் செடிகளைப் பாதுகாக்க ஏற்பாடு

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பனியின் தாக்கத்தில் இருந்து அலங்கார மலா் செடிகள் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக் போா்வை மற்றும் மிலாா் செடிகளைக் கொண்டு பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியா்கள் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சாலை மறியல் போராட்டம்

உதகையில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளா... மேலும் பார்க்க

மதுபோதையில் தொழிலாளியை கத்தியால் குத்தியவா் கைது

குன்னூரில் மதுபோதையில் நடந்த தகராறில் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்தியவா் கைது செய்யப்பட்டாா். குன்னூா் கன்னிமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்கள் ராஜா (49), தங்கராஜ் (56). கூலித் தொழிலாளிகளான இ... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்ட வாக்காளா் பட்டியல் வெளியீடு; பெண் வாக்காளா்களே அதிகம்

நீலகிரி மாவட்டத்தில் பெண் வாக்காளா்களே அதிகம் என்று திங்கள்கிழமை வெளியிட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொக... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் போராட்டம்

சமவெளி பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் காா்ப்பரேட் நிறுவனங்களின் வாடகை வாகனங்கள், சுற்றுலாத் தலங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி நீலகிரி மாவட்ட சுற... மேலும் பார்க்க