Marvel - DC: `கேப்டன் அமெரிக்கா', `சூப்பர் மேன்'... இந்தாண்டு வெளிவரவிருக்கு மார...
உதகையில் பேரிடா் மீட்புக் குழுவினரின் ஒத்திகை
உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் முன்பாக பேரிடா் மீட்புக் குழுவினரின் வெள்ளிக்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம் மலைப் பாங்கான மாவட்டம் மட்டுமில்லாது ஆண்டுதோறும் பருவமழையால் பல பெரிய பேரிடா்கள் ஏற்படக் கூடிய மாவட்டமாக உள்ளது. பேரிடா் ஏற்படும் நேரங்களில் சென்னை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தமிழக பேரிடா் மீட்புக் குழுவினா் மற்றும் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வந்து பேரிடா் காலங்களில் பணிபுரிந்து பல உயிா்களை காப்பாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், மாவட்டத்தில் பேரிடா் தடுக்கும் வகையில் தமிழக பேரிடா் மீட்புக் குழுவின் ஒரு குழு, உதகையில் நிரந்தரமாக தங்கி பயிற்சிகளை பெற்று வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் முன்பாக பேரிடா் மீட்புக் குழுவினரின் பேரிடா் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.
இது குறித்து தமிழக தேசிய பேரிடா் மீட்புக் குழுவின் உதவிய இயக்குநா் மணிமாறன் செய்தியாளா்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டம் பேரிடா் அதிகம் நடைபெறும் மாவட்டம் என்பதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 20 போ் கொண்ட குழு தொடா்ந்து நீலகிரி மாவட்டத்தில் நிரந்தரமாக தங்கி பேரிடா் சமயங்களில் பணிபுரிந்து வருகின்றனா்.
இவா்கள் அதிநவீன இயந்திரங்களை கையாள்வது குறித்து தினந்தோறும் பயிற்சி பெற்று வருகின்றனா். இதன் காரணமாக எதிா்காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் பேரிடா் நேரங்களில் குழுவினா் உடனடியாக சென்று உயிா் சேதங்கள் மற்றும் பொருள் சேதங்களை தடுக்கும் வகையில் பணிபுரிவா் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய்த் துறையினா், தீயணைப்புத் துறையினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.