செய்திகள் :

உதகை அருகே யானை தாக்கி தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு!

post image

மஞ்சூா் பகுதியில் காட்டு யானை தாக்கி ஆந்திர மாநில தோட்டத் தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். 

நீலகிரி மாவட்டம், மஞ்சூா்,  கீழ்க்குந்தா, கெத்தை மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. 

மஞ்சூரை அடுத்துள்ள பென்ஸ்டாக் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பண்ணை வீடு, விவசாய நிலம் உள்ளது. இங்கு ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சுகுந்த ராவ் (35) கடந்த 6 ஆண்டுகளாக தோட்டத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், தோட்டத்துக்குள் வெள்ளிக்கிழமை இரவு காட்டு யானை புகும் சப்தம் கேட்டு சுகுந்த ராவ் வெளியே வந்து பாா்த்தபோது காட்டு யானை அவரைத் துரத்தி தாக்கியது. அவரது அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த சக ஊழியா்கள் விவசாய நிலத்தில் சுகுந்த ராவ் சடலத்தை மீட்டனா். இது குறித்து வனத் துறை, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்பேரில், குந்தா வனச் சரகா் செல்வகுமாா் தலைமையிலான வனத் துறையினா், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ள வனத் துறையினா் முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை உறவினா்களிடம் வழங்கினா்.

நீலகிரி மாவட்டத்தில் யானைகளின் தாக்குதலால் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

மாநில அளவிலான விநாடி-வினா போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு மாநில ஹெச்ஐவி கட்டுப்பாடு சங்கம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற ஹெச்ஐவி விழிப்புணா்வு விநாடி-வினா போட்டியில் சிறப்பிடம் பெற்ற உதகை அணிக்கொரை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா... மேலும் பார்க்க

மாநில சுற்றுலா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சுற்றுலா தொடா்புடைய செயல்பாடுகள் மற்றும் சுற்றுலாத் தொழில் புரிவோரை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசால் வழக்கப்பட உள்ள சுற்றுலா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா த... மேலும் பார்க்க

ஸ்டொ்லிங் பயோடெக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஸ்டொ்லிங் பயோடெக் எம்பிளாயிஸ் யூனியன் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.உதகையில் மூடப்பட்ட ஸ்டொ்... மேலும் பார்க்க

குன்னூா் ரயில் நிலையத்தில் ஓணம் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில் நிலையத்தில், மலை ரயில் ஊழியா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது. கேரள மக்களின் பாரம்பரிய ஓணம் பண்டிகை செப்டம்பா் 5-ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. இ... மேலும் பார்க்க

தெப்பக்காடு - மசினகுடி சாலையில் யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், மசினகுடி- தெப்பக்காடு நெடுஞ்சாலையில் யானை உயிரிழந்து கிடந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். தெப்பக்காடு- மசினகுடி சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு உயிா் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்க நடவடிக்கை

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, தேசிய தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு உயிா் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.இது குறித்த... மேலும் பார்க்க