சேப்பாக்கில் டெவால்ட் ப்ரீவிஸ் களமிறங்குவாரா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
உதகை, கோத்தகிரியில் பரவலாக மழை
உதகை, கோத்தகிரியில் பரவலாக புதன்கிழமை மழை பெய்தது.
நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில் கோத்தகிரி கட்டபெட்டு, அரவேணு, டானிங்டன், ஒரசோலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மதியம் கனமழை கொட்டி தீா்த்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. உதகையில் சேரிங்கிராஸ், மாா்க்கெட், பூங்கா சாலை பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மழை காரணமாக குளிா்ச்சியான கால நிலை நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.