செய்திகள் :

உத்தரகாசி பேரிடர்! மாயமான கேரள சுற்றுலாக் குழு கண்டுபிடிப்பு!

post image

உத்தரகண்ட் மேகவெடிப்பைத் தொடர்ந்த பேரிடரில் மாயமானதாகக் கருதப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர்ந்து, நேற்று (ஆக.5) மதியம் மிகப் பெரியளவில், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டு, ஏராளமான குடியிருப்புக் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட சுற்றுலாக் குழுவொன்று மாயமானதாகவும், அவர்களது நிலைக் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் அவர்களது உறவினர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், அப்பகுதியின் சாலைகள் முடக்கப்பட்டதால், ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட அவர்கள் அனைவரும், பேரிடர் ஏற்பட்ட கங்கோத்ரியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் தற்போது பத்திரமாகவுள்ளதாகவும், திரும்பி வருவதற்கான பாதைகள் அனைத்தும் முடங்கியதால், அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை, உத்தரகண்டின் மலையாளி சமாஜம் தலைவர் திணேஷ் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில், சுற்றுலாக் குழுவினரின் வாகன ஓட்டுநர் அவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என உறுதியளித்ததாகக் கூறியுள்ளார்.

இத்துடன், சுற்றுலாப் பயணிகளின் வாகனம் எங்குள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டதை அவர்களது உறவினர்களும் உறுதி செய்துள்ளனர்.

முன்னதாக, உத்தரகாசியில் ஏற்பட்ட பேரிடரில் ஏராளமானோர் மாயமானதாகக் கருதப்படும் நிலையில், மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம், தீயணைப்புப் படை, காவல் துறை உள்ளிட்ட ஏராளமான படைகள் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அளவற்ற இணையம், ஓடிடி: ரூ.1,601-க்கு வோடாஃபோன் ஐடியாவின் புதிய திட்டம்!

28 tourists from Kerala who were missing in the disaster following the Uttarakhand cloudburst have been confirmed safe.

குவஹாத்தி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

குவஹாத்தி விமான நிலையத்தின் சர்வதேச முனையம் இந்தாண்டு நவம்பரில் பயணிகளுக்காகத் திறக்கப்படும் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.புதிய முனையத்தின் கட்டுமானப் பணிகளைப் புதன்கிழமை ... மேலும் பார்க்க

வங்க மொழி சர்ச்சை: நீண்ட பதாகைகளுடன் போராடிய கால்பந்து ரசிகர்கள்!

தில்லி காவல் துறையின் வங்கதேச மொழி சர்ச்சைக்கு ஈஸ்ட் பெங்கால் கால்பந்து ரசிகர்கள் மிகப்பெரிய பதாகைகளை காண்பித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். மத்திய உள்துறை அமைச்சரவையின்கீழ் இயங்கும் தில்ல... மேலும் பார்க்க

வெளியுறவு கொள்கையின் பேரழிவு! கார்கே

இந்தியா மீதான கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பது வெளியுறவு கொள்கையின் பேரழிவு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெ... மேலும் பார்க்க

திருப்பதி அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ரூ.1 கோடி நன்கொடை!

திருமலை திருப்பதியின் எஸ்.வி பிராணதான அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ஒருவர் ரூ. 1 கோடி நன்கொடை அளித்துள்ளார். தொழிலதிபரான சிராக் புருஷோத்தம், வருவாய் அமைச்சர் ஏ. சத்ய பிரசாத் உடன் திருமலை திருப்பதி தேவஸ்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனம் விபத்து! இருவர் பலி!

ஜம்மு - காஷ்மீரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் இரண்டு வீரர்கள் பலியாகியுள்ளனர்.ஜம்மு - காஷ்மீர், உதம்பூர் மாவட்டத்தின் கட்வாவில் இருந்து பசந்... மேலும் பார்க்க

மாணவர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய தில்லி முதல்வர்!

தில்லியைப் பாதுகாப்பதும் அதன் முன்னேற்றத்திற்காக உழைப்பது தனது பொறுப்பு என்று முதல்வர் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தார்.ஜன சேவா மையத்தில் நடந்த ரக்ஷா பந்தன் நிகழ்வில் முதல்வர் கலந்துகொண்டார். அங்... மேலும் பார்க்க