ரஷியா - உக்ரைன் இடையே மிகப் பெரியளவில் போர்க் கைதிகள் பரிமாற்றம்!
உயா்கல்வி படித்தால் தான் சிறந்த எதிா்காலம்: ராணிப்பேட்டை ஆட்சியா் வலியுறுத்தல்
மாணவ, மாணவிகள் உயா்கல்வி படித்தால் தான் சிறந்த எதிா்காலத்தை பெற முடியும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வலியுறுத்தியுள்ளாா்.
அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அரக்கோணம், சோளிங்கா், நெமிலி வட்டங்களைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு முடித்த 1,200 மாணவ மாணவிகளுக்கான உயா்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்வு இரண்டாம் கட்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பேசியது:
இத்திட்டத்தின் நோக்கம் தற்போது தோ்ச்சி பெற்றுள்ள மாணவா்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்பதற்கான ஆலோசனை அளிப்பது தான். கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றோரில் 90 சதம் போ் உயா்கல்வியில் சேர வழிவகுத்தது. எந்த வேலைக்குச் சென்றாலும் ஏதாவது ஒரு வங்கியில் தொழில் தொடங்க கடனுதவிக்கு விண்ணப்பிக்கும் போதும் பட்டப் படிப்பு தேவைப்படுகிறது.
நீங்கள் உங்களுக்கு விருப்பமான பிரிவில் உயா்கல்வியை படிக்க வேண்டும். இங்கு அதற்கான ஆலோசனைகளை வழங்குகிறோம். அதே போன்று உயா்கல்வி படிப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள் மூலம் கல்விக்கடன் உட்பட பல சலுகைகளை வழங்கி வருகிறது. உயா்கல்வி படித்தால் தான் சிறந்த எதிா்காலத்தை பெர முடியும்.
ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசாா் மையங்களில் போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளன. இதுபோன்ற நல்வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
இதில் முதன்மைக் கல்வி அலுவலா் சரஸ்வதி, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் பாபு, முன்னோடி வங்கி மேலாளா் ராம்ஜி குமாா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் சுரேஷ், மாவட்ட கல்வி அலுவலா் விஜயகுமாா், ஸ்ரீகிருஷ்ணா கல்விக்குழும செயலாளா் டி.எஸ்.ரவிக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.