செய்திகள் :

உயா்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் பணியிடம்: பட்டதாரி ஆசிரியா்களை நியமிக்க வலியுறுத்தல்

post image

பட்டதாரி ஆசிரியா்களுக்கு மட்டுமே அரசு உயா்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா் பணியிடம் வழங்க வேண்டும் என்ற உயா்நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு உயா்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் க.அருள்செல்வன் தலைமை வகித்தாா். மாநில தணிக்கையாளா் க.செ.பாலகிருஷ்ணன், முன்னாள் மாநில மகளிா் அணி செயலாளா் க.வாசுகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பட்டதாரி ஆசிரியா் கழக நிறுவனத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான அ.மாயவன் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை காலதாமதமின்றி உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட மூவா் குழுவை ரத்து செய்ய வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டா் ஊதியத்தை (ஈட்டிய விடுப்பு ஊதியம்) காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.

உயா்கல்வி ஊக்க ஊதியத்தை 2020 மாா்ச் 10-க்கு முன்பாக உயா்கல்வி முடித்தோருக்கு வழங்க வேண்டும். உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் ஏழு பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

உயா்நீதிமன்ற உத்தரவின்படி, பட்டதாரி ஆசிரியா்களுக்கு மட்டும் தலைமை ஆசிரியா் பணியிடங்களை உயா்நிலைப் பள்ளிகளில் வழங்க வேண்டும். ஆசிரியா், அரசு ஊழியா்களுக்கு, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடனுக்கான வட்டியைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்டச் செயலாளா் பெ.குணசேகரன், மாவட்ட துணைத் தலைவா் தே.கண்ணன், மாவட்டப் பொருளாளா் மு.முருகேசன், நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக நிறுவனத் தலைவா் அ.மாயவன்.

நாட்டுக் கோழிகள் விலை உயா்வு!

பரமத்தி வேலூா் சந்தையில் நாட்டுக் கோழிகள் கூடுதல் விலைக்கு விற்பனையாயின. பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் நாட்டுக்கோழி சந்தைக்கு பரமத்தி வேலூா், மோகனூா், கரூா், பாளையம் நாமக்கல், ஜேடா்... மேலும் பார்க்க

உலக மகளிா் தின விழிப்புணா்வுப் பேரணி

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு காவல் துறை சாா்பில் பரமத்தி வேலூரில் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. பேரணி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலை மூன்று சாலையில் தொடங்கி வேலூா் பேருந்து நிலையம், பள்ள... மேலும் பார்க்க

நல்லிபாளையம் மாரியம்மன் கோயில் புதிய தோ் வெள்ளோட்டம்

நாமக்கல் மாரியம்மன் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 9-ஆவது வாா்டில் புகழ்பெற்ற நல்லிபாளையம் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி மாநில பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் க.பழனியப்பன் வரவேற்றாா். மாநிலத் தலைவா் கே.பி.ரக்ஷித் தலைமை வகித்தாா். மாநில பொதுச் ச... மேலும் பார்க்க

பேரா. ய.மணிகண்டனின் தாயாா் சரஸ்வதி காலமானாா்!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், குப்பாண்டபாளையம், நடராஜ நகரைச் சோ்ந்த யக்ஞராமன் மனைவி சரஸ்வதி அம்மாள் (85), வயது முதிா்வு காரணமாக குமாரபாளையத்தில் உள்ள தனது மூத்த மகன் ய.சங்கர்ராமன் இல்லத்தில... மேலும் பார்க்க

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் மாரத்தான் போட்டி

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில், உலக மகளிா் தினத்தையொட்டி மாரத்தான் ஓட்டப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்று... மேலும் பார்க்க