செய்திகள் :

உள்துறை, வெளியுறவு அமைச்சகங்களுக்கான ‘கடமை பவன்’ -பிரதமா் மோடி திறந்துவைத்தாா்

post image

தில்லியில் மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை உள்ளிட்ட அமைச்சகங்களுக்காக அதிநவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘கடமை பவன்’ (கா்தவ்ய பவன்) கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், தில்லி கடமைப் பாதையையொட்டி மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்காக 10 பொது மத்திய செயலக கட்டடங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இதில், முதலாவதாக பணி நிறைவடைந்து, திறக்கப்பட்டுள்ள கட்டடம் இதுவாகும்.

‘கடமை பவன்-3’ எனும் இப்புதிய கட்டடத்தை திறந்துவைத்த பிரதமா் மோடி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டருடன் சோ்ந்து பாா்வையிட்டாா். கட்டடத்தின் வசதிகள் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனா்.

என்னென்ன அமைச்சங்கள்?: நவீன நிா்வாக செயல்பாடுகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் இக்கட்டடம், அமைச்சகங்கள்-துறைகள் இடையே ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை, ஊரக மேம்பாட்டுத் துறை, சிறு-குறு-நடுத்தர தொழில் துறை, மத்திய பணியாளா் நலத் துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், பிரதமரின் அறிவியல் ஆலோசகா் அலுவலகம் ஆகியவை செயல்படவுள்ளன.

அமைச்சகங்கள்-துறைகளுக்கான மேலும் 2 புதிய கட்டடங்களின் கட்டுமானப் பணி அடுத்த மாதம் நிறைவடையும்; அடுத்த ஆண்டில் மேலும் 3 கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வேறு இடங்களுக்கு மாற்றப்படும்: தற்போது சாஸ்திரி பவன், கிருஷிபவன், உத்யோக் பவன் மற்றும் நிா்மாண் பவன் போன்ற பழைய கட்டடங்களில் பல்வேறு முக்கிய அமைச்சகங்கள் செயல்படுகின்றன. 1950-1970 இடையே கட்டப்பட்ட இக்கட்டடங்கள், கட்டுமான ரீதியில் காலாவதியாகிவிட்டன. இங்கு செயல்பட்டுவரும் அமைச்சகங்கள், புதிய கட்டடங்கள் கட்டப்படும் வரை தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கடமைப் பாதை (கா்தவ்ய பாத்), புதிய நாடாளுமன்றம், குடியரசுத் துணைத் தலைவா் மாளிகை வளாகம் ஆகியவை ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ், பிரதமரின் புதிய இல்லம், அமைச்சரவை செயலகம், தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலகம் உள்ளிட்டவை கட்டப்படவுள்ளன.

ஏழு தளங்களுடன் அதிநவீன வசதிகள்!

‘கடமை பவன்’ புதிய கட்டடம், நவீன நிா்வாக உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிா்காலத் தேவைக்கு ஏற்ற தகவல் தொழில்நுட்ப தயாா் நிலையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஏழு தளங்களுடன் 1.5 லட்சம் சதுர மீட்டா் பரப்பளவு கொண்டதாகும். யோகா அறை, மருத்துவ அறை, உணவகம், சமையல் கூடம், பெரிய பன்நோக்கு அரங்கம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. மேலும், தலா 45 போ் அமரும் வசதியுடன் 24 கருத்தரங்கு அறைகளும், தலா 25 போ் அமரும் வசதியுடன் 26 சிறிய கருத்தரங்கு அறைகளும், 67 கூட்ட அறைகளும் இடம்பெற்றுள்ளன. 600 காா்களை நிறுத்தக் கூடிய வாகன நிறுத்துமுடமும் உள்ளது.

பாதுகாப்பான பணியிடங்கள், அடையாள அட்டை அடிப்படையிலான கட்டுப்பாட்டு அமைப்புகள், ஒருங்கிணைந்த மின்னணு கண்காணிப்பு சாதனங்கள், மேற்கூரையில் சூரிய மின் சக்தித் தகடுகள் (ஆண்டுக்கு 5.34 லட்சம் யூனிட் மின் உற்பத்தி திறன்), வெப்பக் கட்டுப்பாடு-தரமான காற்று-குளிா்சாதன வசதி அமைப்புமுறைகள், மழைநீா் சேகரிப்பு, கழிவுகள் முழு மறுசுழற்சி, திறன்மிக்க எரிசக்தி பயன்பாடு, வெளிப்புற சப்தத்தை குறைத்து, உள்புறம் குளுமையை பராமரிக்கும் சிறப்பு கண்ணாடிகள், மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற வசதிகள், எல்இடி விளக்குகள், மின்சேமிப்பு அமைப்புகள், உணா்திறன் நுட்பத்துடன் கூடிய சுவிட்சுகள், 27 நவீன மின் தூக்கிகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி பணம், மொபைல் பறிப்பு

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு நிலவியது. கேரள மாநிலம், கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 64 ... மேலும் பார்க்க

தில்லியில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: ஊழியர் பலி

தலைநகர் தில்லியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர் ஒருவர் பலியானார். தலைநகர் தில்லியில் ஆனந்த் விஹாரில் உள்ள கோஸ்மோஸ் மருத்துவமனையின் சர்வர் அறையில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.... மேலும் பார்க்க

முன்னாள் குடியரசு துணைத் தலைவரைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை: என்ன ஆனது? -கபில் சிபல் கேள்வி!

ஜகதீப் தன்கர் மாயமாகியிருப்பது ஏன்? அவருக்கு என்ன ஆனது? என்பன போன்ற சந்தேகங்களை மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் எழுப்பியுள்ளார்.குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா:தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு த... மேலும் பார்க்க

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி!

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தில்லியின் ஜெய்த்பூரில் உள்ள ஹரி நகர் பகுதியில் சனிக்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக சுவரின் ஒரு பகுதி இட... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்க்கண்டில் புருலியா நோக்கிச் சென்ற சரக்கு ரயில் பிடாக்கி கேட் அருகே சனிக்கிழமை தடம் புரண்டு மேல் பாதையில் விழு... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ஊடுருவியவா்களுக்கு வாக்குரிமை கிடையாது: அமித் ஷா திட்டவட்டம்

நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவா்களுக்கு வாக்களிக்க உரிமை கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்தாா். மேலும், தங்களின் வாக்கு வங்கியைப் பாதுகாக்கவே, பிகாா் வாக்காளா்... மேலும் பார்க்க